மோசடிகளுக்கு இலக்காகும் வெளிநாட்டு ஊழியர் அதிகம் இல்லப் பணிப்பெண்களும் அதிகம் ஏமாற்றப்படுவதாக காவல்துறை தெரிவிக்கிறது

மோச­டி­க­ளுக்கு ஆளா­கின்ற வெளி­நாட்டு ஊழி­யர்­களும் இல்­லப் பணிப்­பெண்­களும் முன்­பை­விட இப்­போது அதி­கம் என்று காவல்­துறை தெரி­விக்­கிறது.

சென்ற ஆண்­டில் 3,181 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மோச­டி­களில் சிக்கி ஏமாந்­த­னர். இந்த எண்­ணிக்கை 2020ஆம் ஆண்­டில் 1,965 ஆக இருந்­தது. சென்ற ஆண்­டில் மோச­டி­க­ளுக்கு இலக்­கான இல்­லப் பணிப்­பெண்­கள் 357 பேர்.

இந்த எண்­ணிக்கை 2020ஆம் ஆண்­டை­விட அதி­கம். 2020ஆம் ஆண்­டில் 216 இல்­லப் பணிப்­பெண்­கள் மோசடி­களில் ஏமாற்­றப்­பட்­ட­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

இத­னி­டையே, பல்­வேறு மோசடி­ க­ளி­லும் பின்­பற்­றப்­படும் உத்­தி­கள், தில்­லு­முல்­லு­கள் பற்றி வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அதி­கம் புரிந்து­கொள்ள வேண்­டும் என்­ப­தற்­காக நல்­வாழ்வு அமைப்­பு­களும் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டுதி நடத்து­வோ­ரும் முயற்­சி­களை முடுக்­கி­விடு­கி­றார்­கள் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டது.

மோச­டி­கள் அதி­க­ரித்து வரு­வதால் அத்­த­கைய தில்­லு­முல்­லு­களில் சிக்­கா­மல் வெளி­நாட்டு ஊழி­யர்­களைப் பாது­காக்­கும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஊழி­யர்­கள் ஏன் ஏமாற்­றப்­ப­டு­கி­றார்­கள் என்­ப­தற்­கான கார­ணங்­களை நல்­வாழ்வு அமைப்­பு­கள் குறிப்­பிட்­டன. கொவிட்-19 தொற்று கார­ண­மாக ஏற்­பட்ட பணச் சிர­மங்­களும் ஃபேஸ்புக்­கில் இடம்­பெறும் போலி­யான வேலை விளம்­பரங்­களும் அத்­த­கைய கார­ணங்­களில் அடங்­கும் என்று அந்த அமைப்­பு­கள் தெரி­வித்­தன.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் வேலை தொடர்­பான மோசடி ஒன்­றில் ஏமாற்­றப்­பட்டு $11,000 இழந்­து­விட்­ட­தாக சிங்­கப்­பூ­ரில் வேலை பார்க்­கும் ஒரு வெளி­நாட்டு ஊழி­யர் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

அந்த 45 வயது ஊழி­யர் பங்ளா­தே­ஷில் தன் குடும்­பத்­திற்­காக ஒரு வீட்­டைக் கட்ட திட்­ட­மிட்டார். ஆனால் பணம் போய்­விட்­ட­தால் வீடு கட்­டும் திட்­டத்தை கால­வ­ரம்­பின்றி அவர் ஒத்திவைத்­து­விட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் சென்ற ஆண்டு டிசம்­பர்வாக்­கில் 246,300 வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­கள் பணி­யாற்­றி­னர். கட்­டு­மா­னம், கடல்­துறை, செய்முறை தொழில்துறை ஆகி­ய­வற்­றில் 318,400 வேலை அனு­ம­திச்­சீட்டு ஊழி­யர்­கள் பணி­யாற்­றி­யதாக மனி­த­வள அமைச்சு தெரி­விக்­கிறது.

இத­னி­டையே, மனி­தவள அமைச்சு, லாப­நோக்­கற்ற அமைப்பு­களு­டன் அணுக்­க­மா­கச் செயல்­பட்டு ஆகப் புதிய குற்­றச்­செ­யல் போக்­கு­களை ஊழி­யர்­க­ளி­டம் எடுத்துச் சொல்லி உதவி வரு­வ­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

வேலை தொடர்­பான தில்­லு­முல்லு­கள், இணைய வர்த்­தக மோசடி­கள், மின்­னஞ்­சல் மோச­டி­கள் ஆகி­ய­வையே வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மிக அதி­க­மாக எதிர்­நோக்­கிய மோச­டி­களில் அடங்­கும்.

அதே­போல, மின்­னஞ்­சல் மோசடி­கள், இணை­யக் காதல் மோச­டி­கள், கடன் மோச­டி­களில் பணிப்­பெண்­கள் அதி­கம் சிக்­கு­கி­றார்­கள்.

இந்த நிலவரம் கவலை தரு­வதாக நல்­வாழ்வு அமைப்­பு­கள் தெரி­வித்­தன. மோச­டி­களை எதிர்­நோக்­கும் ஊழி­யர்­கள், தங்­கள் முத­லா­ளி­களை அல்­லது வேலை நிய­மன நிறு­வ­னங்­களை உத­விக்கு நாட வேண்­டும் என்று 'யுனைட்­டெட் சேனல்' என்ற நிறு­வ­னத்­தின் நிர்­வாகி திரு­வாட்டி ஃபுளோரா ஷா தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!