பள்ளிகளில் சேர மீண்டும் நேரடி நேர்காணல்கள்

'டிஎஸ்ஏ' எனும் நேர­டிப் பள்ளி நுழை­வுச் சேர்க்கை திட்­டத்­திற்கு இவ்­வாண்டு நேரடி நேர்­கா­ணல்­கள் மீண்­டும் இடம்­பெ­ற­வுள்­ள­தாக கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது. அத்­திட்­டம், தேர்வு முடிவுகளுக்கு அப்பால் மாணவர்களின் இதர திறன்­க­ளைக் கருத்­தில்­கொண்டு உயர்­நி­லைப் பள்­ளி­களிலும் தொடக்­கக் கல்­லூரி­களிலும் அவர்கள் சேர வகை­செய்கிறது.

நேரடி நேர்­கா­ணல்­க­ளின் மூலம் விளை­யாட்டு, இசை உள்­ளிட்­ட­வற்­றில் தங்­க­ளுக்கு இருக்­கும் திறன்­களை மாண­வர்­க­ளால் மேலும் நன்­றாக வெளிப்­ப­டுத்­த­மு­டி­யும்.

நேர­டிப் பள்ளி நுழை­வுச் சேர்க்கை திட்­டத்­தில் 142 உயர்­நிலைப் பள்­ளி­களும் 20 தொடக்­கக் கல்­லூ­ரி­களும் இடம்­பெற்­றுள்­ளன. மாண­வர்­களும் பெற்­றோ­ரும் இன்று முதல் அவற்­றுக்கு விண்­ணப்­பம் செய்­ய­லாம்.

இன்று பிற்பகல் மூன்று மணி முதல் அடுத்த மாதம் ஒன்றாம் தேதிவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

அண்­மை­யில் கொவிட்-19 கிருமிப் பர­வல் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டன. அதற்கு ஏற்­ற­வாறு நேரடி நேர்­கா­ணல்­கள் மீண்­டும் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாகக் கல்வி அமைச்சு கூறி­யது. மாண­வர்­கள், பள்ளி ஊழி­யர்­கள் ஆகி­யோரில் அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­தால் இது சாத்­தி­யப்­படு­வ­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

இவ்­வாண்டு முதல் கூடு­த­லான மாண­வர்­கள் நேர­டிப் பள்ளி நுழை­வுச் சேர்க்கை திட்­டத்­தின்வழி பள்ளி­களில் சேர்க்­கப்­ப­ட­லாம்.

முன்­ன­தாக அர­சாங்க ஆத­ர­வு­டன் இயங்­கும் தொடக்­கக் கல்­லூரி­களின் ஈராண்டு பொதுக் கல்விச் சான்­றி­தழ் மேல்­நி­லைப் பாடத் திட்­டத்தை மேற்­கொள்­ளும் மாண­வர்­களில் 10 விழுக்­காட்­டி­னர் நேர­டிப் பள்ளி நுழை­வுச் சேர்க்கை திட்­டத்­தின்­வழி சேர்க்­கப்­பட்­ட­னர். அந்த விகி­தம் 20 விழுக்­காட்­டுக்கு அதி­கரிக்­கப்­பட்­டுள்­ளது.

சென்ற ஆண்டு நேரடிப் பள்ளி நுழைவுச் சேர்க்கை திட்டத்திற்கு 31,400 விண்ணப்பங்கள் பதிவாயின. இந்த எண்ணிக்கை, 2020ஆம் ஆண்டு பதிவானதைவிட 900 அதிகம்.

தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கங்­களில் முன்­ன­தா­கவே சேர்ந்­து­கொள்­வ­தற்­கான விண்­ணப்­பங்­களை­யும் இம்­மா­தம் 26ஆம் தேதி­யி­லி­ருந்து சமர்ப்­பிக்­க­லாம். மாணவர்­கள் மேற்­கொள்­ள­ வி­ரும்­பும் பாடத் திட்­டங்­க­ளின் தொடர்­பில் அவர்­க­ளுக்கு இருக்­கக்­கூ­டிய திறன்­கள் போன்­ற­வற்­றைக் கருத்தில்­கொண்டு சேர்க்கை நடவடிக்கை மேற்­கொள்­ளப்­படும்.

பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­களுக்­கான நட­வடிக்கை அடுத்த மாதம் ஆறாம் தேதி­யன்று தொடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!