தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

950,000 பேர் தரைவழிப் பயணம் மேற்கொண்டனர்

1 mins read
6afef350-416c-4d30-af8b-72993815166c
-

கடந்த நீண்ட வார இறு­தி­யில் சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையே உள்ள தரை­வழி எல்­லை­களை 950,000க்கும் அதி­க­மா­னோர் கடந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்டுள்ளது.

சென்ற வாரம் வெள்­ளிக்­கி­ழமை தொடங்கி ஐந்து நாள்­களில் 491,400 பேர் தரை­வழி எல்­லை­க­ளின்­வழி சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து மலே­சி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்­ட­னர். 462,400 பேர் மலே­சி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்தனர்.

முன்­ன­தாக புனித வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற நீண்ட வார இறு­தி­யில் 436,800 பேர் தரை­வழி எல்­லை­க­ளைக் கடந்­த­னர். சென்ற மாதம் 15ஆம் தேதிக்­கும் 17ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் இந்த எண்­ணிக்கை பதி­வா­னது.

சென்ற மாதம் முதல் தேதி­யன்று முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் கட்­டுப்­பா­டு­க­ளின்றி தரை­வழிப்ப யணம் மேற்கொள்ளலாம் என்று அறி­விக்­கப்­பட்டது. புனித வெள்­ளிக்­கி­ழமை, அதற்­குப் பிறகு வந்த முதல் பொது விடு­முறை நாள்.

கடந்த நீண்ட வார இறுதியில் வாக­னங்­களிலும் மோட்­டார் சைக்­கிள்­களிலும்தான் கூடு­த­லா­னோர் தரை­வழி எல்­லை­க­ளைக் கடந்­த­தாக குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் தெரி­வித்­தது.

660,400 பய­ணி­கள் தங்­க­ளின் வாக­னங்­களில் எல்­லை­க­லைக் கடந்தனர். 293,400 பேர் மட்­டுமே பேருந்­துச் சேவை­களில் சென்­ற­னர். எல்லை தாண்டிய பேருந்­துச் சேவை­களைப் பயன்­ப­டுத்­து­மாறு குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் முன்­ன­தாக பய­ணி­களுக்கு ஆலோ­சனை வழங்­கி­யிருந்தது.