உரி­மம் இல்­லா­மல் கடன்: 132 பேரி­டம் விசா­ரணை

உரி­மம் இல்­லா­மல் கடன்: 132 பேரி­டம் விசா­ரணை

1 mins read
34fcf987-f558-419f-bd8e-681a832ab6ea
-

உரி­மம் இல்­லா­மல் கடன் கொடுக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­ட­

தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் 132 பேரி­டம் காவல்­து­றை­யி­னர்

விசா­ரணை நடத்­து­கின்­ற­னர்.

சந்­தேக நபர்­கள் 18 வய­துக்­கும் 68 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தீவெங்­கும் நடத்­தப்­பட்ட அதி­ர­டிச்

சோத­னை­யில் சந்­தேக நபர்­கள் பிடி­பட்­ட­னர்.

பிடி­பட்ட சந்­தேக நபர்­களில் மூவர் கடன் வாங்­கி­ய­வர்­க­ளின் வீடு­க­ளுக்­குச் சென்று அவர்­

க­ளுக்­குத் தொல்லை விளை­வித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

உரி­மம் இல்­லா­மல் கடன் கொடுத்த குற்­றம் தொடர்­பில் தானி­யங்கி வங்கி இயந்­தி­ரம் மூலம் பணப் பரி­வர்த்­தனை செய்­த­தாக 14 பேர் மீது சந்­தே­கம் எழுந்­துள்­ளது.

எஞ்­சி­யுள்ள 115 பேர் உரி­மம் இல்­லா­மல் கடன் கொடுப்­ப­வர்

­க­ளுக்கு உத­வும் வகை­யில்

வங்­கிக் கணக்­கு­க­ளைத் திறந்­த­தாக நம்­பப்­ப­டு­கிறது.

உரி­மம் இல்­லா­மல் கடன் கொடுப்­ப­வர்­க­ளுக்கு உத­வு­வோ­ருக்கு நான்கு ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­டனை அல்­லது $30,000லிருந்து $300,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம். அவர்­க­ளுக்கு அதி­க­பட்­சம் ஆறு பிரம்­ப­டி­கள் விதிக்­கப்­ப­ட­லாம்.

உரி­மம் இல்­லா­மல் கடன் கொடுப்­ப­வர் சார்­பா­கச் செயல்­

ப­டு­ப­வர்­க­ளுக்­கும் கடன் வாங்­கி ­ய­வர்­க­ளுக்­குத் தொல்லை விளை­விப்­போ­ருக்­கும் ஐந்து ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை, $5,000லிருந்து $50,000 வரை அப­ரா­தம்,

மூன்­றி­லி­ருந்து ஆறு பிரம்­ப­டி­கள் விதிக்­கப்­ப­ட­லாம்.