ஷங்ரிலா மாநாட்டில் ஜப்பானிய பிரதமர்

ஷங்ரிலா மாநாட்டில் ஜப்பானிய பிரதமர்

1 mins read
1f2161ea-5ec8-4378-b17f-1f43fd21eeaa
-

சிங்­கப்­பூ­ரில் ஜூன் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி­வரை ஷங்ரிலா ஆசிய பாது­காப்பு உச்­ச­நிலை மாநாடு நடக்­கிறது.

ஜப்­பா­னிய பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா அந்த மாநாட்­டில் கலந்து­கொள்ள ஆயத்­தப் பணி­க­ளைச் செய்­துவ­ரு­கி­றார் என்று ஜப்­பானின் நிக்கெய் செய்­தித்­தாள் தெரி­வித்­துள்­ளது.

ஜப்­பா­னின் தற்­காப்பு அரண் பற்­றிய புரிந்­து­ணர்­வைப் பேணி வளர்க்­கும் நோக்­கத்­தில் அவர் அந்த மாநாட்­டில் கலந்­து­கொள்ள விரும்புகிறார்.

உக்­ரேனை ரஷ்யா ஆக்­கி­ர­மித்து இருக்­கிறது. சீனா கடல் பகு­தி­யில் கெடு­பி­டி­யாக நடந்து கொள்­கிறது. இந்­தச் சூழ­லில் மேற்­கத்­திய மற்றும் ஆசிய தற்­காப்பு அதி­கா­ரி­கள் அனைத் துலக அள­வில் ஒத்து­ழைப்பை மேம்­ப­டுத்த வேண்­டும் என்று பிர­த­மர் கிஷிடா கோரிக்கை விடுத்­தார்.

ஜப்­பா­னின் முன்னாள் பிர­த­மர் அபே 2014 ஆம் ஆண்­டில் அந்த பாது­காப்பு உச்­ச­நிலை மாநாட்­டில் கலந்­துகொண்­டார்.

அதற்­குப் பிறகு முதல் முறை­யாக ஜப்­பா­னிய பிர­த­மர் இப்­போது ஷங்­ரிலா உச்­ச­நிலை மாநாட்டில் கலந்­து­கொள்ள இருக்­கி­றார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.