சிங்கப்பூரில் இவ்வாண்டு பிற்பகுதியில் புகைமூட்டம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
ஆசியான் வட்டாரத்தில் வறண்ட, வெப்பமான காலநிலை காரணமாக தீப்பரப்புகள் உருவாகலாம் என்றும் அதனால் புகைமூட்டம் ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
'லா நினா' நிகழ்வு காரணமாக தென்கிழக்கு ஆசியாவில் கடந்து இரண்டு ஆண்டுகளாக ஈரமான வானிலை நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து வறண்ட பருவம் தொடங்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
தீப்பரப்புகள், காற்றின் திசை ஆகிய காரணங்களால் சிங்கப்பூரில் எல்லை தாண்டிய புகைமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் கடைசியாக 2019ஆம் ஆண்டு எல்லை தாண்டிய புகைமூட்டம் ஏற்பட்டது.