பீ‌ஷான் ரயில் நிலையத்தில் காலைநேர கூட்ட நெரிசல்

பீ‌ஷான் ரயில் நிலையத்தில் காலைநேர கூட்ட நெரிசல்

1 mins read
f8aa7e42-b139-49a1-8bdf-379857809c5d
படங்கள்: பேஸ்புக் -

பீ‌ஷான் வட்டப்பாதை ரயில் நிலையத்தில் இன்று காலை கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் காட்சிகளைக் காட்டும் படங்களும் காணொளிகளும் சமூகத் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

கூட்ட நெரிசல் காலை எட்டரை மணியளவில் நடந்ததாகக் கூறப்பட்டது. ரயில் நிலைய நுழைவாயிலிருந்து ரயில் ஏறும் தடம் வரை மக்கள் கூட்டம் அலைமோதியது.

பாதிக்கப்பட்ட பலர் ரயில் ஏறுவதற்கு 30 நிமிடங்கள் எடுத்துக்கொண்டதாகக் கூறினர்.

சிராங்கூன் ரயில் நிலையத்திலும இன்று காலை நெரிசல் ஏற்பட்டது. அங்கிருந்து ரயில் எடுக்க 15 நிமிடங்கள் பிடித்ததாகப் பயணிகள் கூறினர்.

இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை. கூட்ட நெரிசலுக்கான காரணமும் கூறப்பட்டவில்லை. சம்பவம் குறித்து 'எஸ்­எம்­ஆர்டி' நிறு­வ­னம் கருத்து தெரிவிக்கவில்லை.