லிம் தியன் மீது நாளை குற்­றச்­சாட்­டு­கள் பதிவு

வழக்­க­றி­ஞ­ரும் எதிர்க்­கட்சி அர­சி­யல்­வா­தி­யுமான லிம் தியன் மீது நம்­பிக்கை மோச­டி­யில் ஈடு­பட்­டது, சட்­ட­வி­ரோத பின்­தொ­டர்­தல், தகுந்த சான்­றி­தழ் இல்­லா­மல் வழக்­க­றி­ஞ­ரா­கச் செயல்­பட்­டது ஆகி­யவை தொடர்­பாக நாளை குற்­றம் சுமத்­தப்­படும்.

திரு லிம்­மின் முன்­னாள் கட்­சிக்­கா­ரர் ஒரு­வ­ருக்கு வாகன விபத்­தில் காய­ம­டைந்­த­தற்கு $30,000 இழப்­பீடு வழங்­கப்­பட்­ட­தா­க­வும் 2019ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் தம்­மி­டம் நம்பி கொடுக்­கப்­பட்ட அத்­கொ­கையை திரு லிம் கை

யா­டி­ய­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

2020ஆம் ஆண்­டில் தமது கார்­சன் சட்ட நிறு­வ­னத்­தின் முன்­னாள் ஊழி­ய­ரான பெண் ஒரு­வரை சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் திரு லிம் பின்­தொடர்ந்­த­தா­க­வும் நம்­பப்­ப­டு­கிறது. கடந்த ஆண்டு ஏப்­ரல் 1ம் தேதிக்­கும் ஜூன் 9ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் வழக்­க­றி­ஞ­ரா­கச் செயல்படு­வ­தற்­கான சான்­றி­தழ் இல்­லா­த­போ­தி­லும் 66 வெவ்­வேறு சம்­ப­வங்­களில் அவர் வழக்கறி­ஞர் சேவை வழங்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மற்ற விவ­கா­ரங்­கள் குறித்­தும் திரு லிம்­முக்கு எதி­ராக விசா­ரணை நடத்­தப்­ப­டு­வ­தாக காவல்­துறை தெரி­வித்­தது. நம்­பிக்கை மோச­டிக் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் திரு லிம்­முக்கு ஆயுள் தண்­டனை அல்­லது 20 ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­டனையுடன் அபராதமும் விதிக்­கப்­ப­ட­லாம். திரு லிம் சட்­ட­வி­ரோ­த­மா­கப் பின்­தொ­டர்ந்­தது நிரூ­பிக்­கப்­பட்­டால் அவ­ருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்­டனை, $5,000 வரை அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!