தன்னுடன் தங்கியிருந்தவரின் உணவில் போதைப் பொருளைக் கலந்த ஆடவருக்கு ஆறாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அச்சம்பவம் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிகழ்ந்தது.
குற்றத்தைப் புரிந்த ஆடவர் போதைப் பொருளுக்கு அடிமையானவர்.
தன்னுடன் தங்கியிருந்தவருக்குப் பாடம் கற்பித்து பழி தீர்த்துக்கொள்ள 49 வயது டான் கோ டியோங் ஹொங் அவ்வாறு செய்தார்.
போதைப் பொருளை உட்கொண்டது, நச்சுணவு போன்றவற்றின் மூலம் பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புகொண்டார்.
ஏற்கெனவே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கோவிற்கு ஆறாண்டுகள் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.