'ஏர் இந்தியா' செல்லும் கேம்பல் வில்சன்

'ஏர் இந்தியா' செல்லும் கேம்பல் வில்சன்

1 mins read
6a9f9915-2117-4582-9c13-08f7f0b6ece0
திரு கேம்பல் வில்சன். படம்: ஏஎஃப்பி -

சிங்கப்பூர் ஏர்லைன்சின் குறைந்த கட்டண விமானச் சேவையான 'ஸ்கூட்'டின் தலைமை நிர்வாக அதிகாரியான கேம்பல் வில்சன் வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் ஏர் இந்தியாவில் சேர்கிறார்.

டாட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

திரு வில்சனுக்குப் பதிலாக 23 ஆண்டுகளாக சிங்கப்பூர் ஏர்லைன்சில் பணிபுரியும் திரு லெஸ்லி தெங் ஸ்கூட் விமானச் சேவையின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பார்.

மேலும் 2016ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 'ஸ்கூட்'டின் தலைமை வர்த்தக அதிகாரியாக திரு தெங் பதவி வகித்தார்.

ஜூன் 15ஆம் தேதியன்று 'ஸ்கூட்' விமானச் சேவையிடமிருந்து திரு வில்சன் விடைபெறுவார் என்று தெரிவிக்கப்பட்டது.