எதிர்க்கட்சி அரசியல்வாதி லிம் தியன் மீது 5 குற்றச்சாட்டுகள்

எதிர்க்கட்சி அரசியல்வாதி லிம் தியன் மீது 5 குற்றச்சாட்டுகள்

2 mins read
c5a08b48-db55-4e71-b827-24afc894203e
-

வழக்­க­றி­ஞ­ரும் எதிர்க்­கட்சி அர­சி­யல்­வா­தி­யு­மான 57 வயது லிம் தியன் மீது பல்­வேறு குற்­றங்­கள் தொடர்­பாக ஐந்து குற்­றச்­சாட்­டு­கள் பதி­வா­கி­யுள்­ளன.

நம்­பிக்கை மோச­டிக் குற்­றம், சட்­ட­வி­ரோ­த­மா­கப் பின்­தொ­டர்­தல், தகுந்த சான்­றி­தழ் இல்­லா­மல் வழக்­க­றி­ஞ­ரா­கச் செயல்­பட்­டது ஆகி­யவை தொடர்­பாக அவர்

குற்­றம் சுமத்­தப்­பட்­டார்.

லிம் தியன் தற்­போது கார்­சன் சட்ட நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ள­ராக இருப்­பதை சட்ட அமைச்­சின் இணை­யத்­த­ளம் குறிப்­பி­டு­வ­தா­கஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் தெரி­வித்­தது.

2019ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 14ஆம் தேதிக்­கும் டிசம்­பர் மாதம் 4ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் லிம் தியன் நம்­பிக்கை மோச­டிக் குற்­றத்­தில் ஈடு­பட்­ட­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி வித்­தன.

வாகன விபத்து தொடர்­பாக அவ­ரது கட்­சிக்­கா­ர­ருக்கு $30,000 இழப்­பீடு வழங்­கப்­ப­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

லிம் தியனை நம்பி அந்­தத் தொகை அவ­ரி­டம் கொடுக்­கப்­பட்­டது.

ஆனால் அப்­ப­ணத்தை லிம் தியன் கையா­டி­ய­தா­கக்

குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

2020ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதத்­துக்­கும் மே மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் முன்­னாள் பெண் ஊழி­யரை அவர் சட்ட

விரோ­த­மா­கப் பின்­தொ­டர்ந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

முறை­யற்ற குறுஞ்­செய்­தி­களை லிம் தியன் அவ­ருக்கு அனுப்பி சங்­க­டப்­ப­டுத்­தி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதம் 1ஆம் தேதிக்­கும் ஜூன் மாதம் 9ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் தகுந்த சான்­றி­தழ் இல்­லா­மல் லிம் தியன் வழக்­க­றி­ஞ­ராக சட்ட சேவை­களை வழங்­கி­ய­தாக அவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதம் 19ஆம் தேதி­யன்று 'தி ஆன்­லைன் சிட்­டி­சன்' இணை­யப்­பக்­கத்­தின் ஆசி­ரி­ய­ரான டெரி சூ என்­ற­ழைக்­கப்­படும் சூ யுவான்­சென்னை லிம் தியன் பிர­தி­நி­தித்­தார்.

அந்த இணை­யப்­பக்­கத்­தில் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்த அறிக்கை களுக்கு எதி­ரா­கப் பிர­த­மர் லீ சியன் லூங் அவ­தூறு வழக்கு தொடுத்­தி­ருந்­தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் லீக்கு இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் $210,000 வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

லிம் தியன் நேற்று $30,000 பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். இந்த வழக்­குக்கு முந்­திய கலந்

துரை­யா­டல் வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதி­யன்று நடை­பெ­றும்.

மோச­டிக் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் லிம் திய­னுக்கு ஆயுள் தண்­டனை அல்­லது அதி­க­பட்­சம் 20 ஆண்­டு­க­ளு­டன் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

சட்­ட­வி­ரோத பின்­தொ­டர்­தல் நிரூ­பிக்­கப்­பட்­டால் ஓராண்டு வரை சிறை­யும் $5,000 வரை அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

தகுந்த சான்­றி­தழ் இல்­லா­மல் சட்ட சேவை வழங்­கிய குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் ஆறு மாதங்­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் $25,000 வரை அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.