உணவில் போதைப்பொருள் கலந்து தந்தவருக்குச் சிறை

உணவில் போதைப்பொருள் கலந்து தந்தவருக்குச் சிறை

1 mins read
4e901d17-90df-4078-88b9-b93c3aa18dfe
-

பழி­வாங்­கும் எண்­ணத்­து­டன் தம்­மு­டன் ஒரே வீட்­டில் வசித்­த­வ­ரின் உண­வில் போதைப்­பொ­ருள் கலந்த போதைப் புழங்­கிக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அந்த உண­வைச் சாப்­பிட்­ட­போது அது வித்­தி­யா­ச­மாக இருப்­பதை அந்த ஆட­வர் உணர்ந்தார்.

சந்­கே­தம் எழுந்து,

கண்­கா­ணிப்பு கேம­ரா­வில் பதி­வான காட்­சி­களை அவர் சோதித்­துப் பார்த்­த­போது 49 வயது டான் கோ தியோங் ஹோங்­கின் செயல் வெளிச்­சத்­துக்கு வந்­தது.

உண்மை அறிந்­த­தும் அவர் காவல்­து­றைக்கு உட­ன­டி­யா­கத் தக­வல் தெரி­வித்­தார்.

தமக்கு மிக­வும் சோர்­வாக இருந்­த­தா­க­வும் இத­யப் பட­ப­டப்பு அதி­க­மாக இருந்­த­தா­க­வும் அள­வுக்கு அதி­க­மான விழிப்­பு­டன் இருந்­த­தா­க­வும் தெரி­வித்த அந்த ஆட­வர் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றார்.

அவ­ருக்­குச் சிறு­நீர் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­ட­போ­து அதில் போதைப்­பொ­ருள் உட்­கொண்­ட­தற்­கான தட­யங்­கள் தென்­பட்­டன.

போதைப்­பொ­ருள் உட்­கொண்­டது, பிற­ரது உண­வில் போதைப்­பொ­ருள் கலந்­தது உட்­பட மூன்று குற்­றச்­சாட்­டு­களை கோ ஒப்­புக்­கொண்­டார்.

தம்முடன் வாட்­டர்லூ ஸ்தி­ரீட்­டில் வசித்த 48 வயது ஆட­வ­ரைக் காவல்து­றை­யி­ன­ரி­டம் சிக்­க­வைக்­கவே அவ­ரது உண­வில் போதைப்­பொ­ருளை கோ கலந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.