அறிக்கையைத் திருத்த ஆர்வலருக்கு உத்தரவு

1 mins read
445cc1ff-dfce-4d48-b712-a00c4c090786
-

ஆர்­வ­லர் கில்­பர்ட் கோ தாம் பதி­விட்ட அறிக்­கை­யில் திருத்­த­மிட வேண்­டும் என்று பொஃப்மா எனப்­படும் இணை­ய­வழி பொய்ச் செய்­திக்­கும் சூழ்ச்­சித் திறத்­துக்­கும் எதி­ரான பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

பெண் ஒரு­வ­ருக்­கும் அவ­ரது துணை­வ­ருக்­கும் அவ­ச­ர­மாக நிதி உதவி தேவைப்­பட்­ட­தா­க­வும் ஆனால் ஆத­ர­வுக்­க­ரம் நீட்ட யாரும் இல்லை என்­றும் கடந்த மாதம் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் கோ பதிவு செய்­தி­ருந்­தார்.

அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து அப்­பெண்­ணுக்­கும் அவ­ரது துணை

வருக்­கும் உதவி கிடைக்­க­வில்லை என்ற எண்ணத்தை கோவின் அறிக்கை ஏற்­ப­டுத்­தி­ய­தாக சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு நேற்று கூறி­யது.

சம்­பந்­தப்­பட்ட பெண்­ணும் அவ­ரது துணை­வ­ரும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சி­ட­மி­ருந்­தும் ஒருங்­கி­ணைப்­பட்ட பரா­ம­ரிப்பு அமைப்பு, மெக்­பர்­ச­னில் உள்ள டிஎச்கே குடும்­பச் சேவை நிலை­யம் போன்ற அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்­தும் உதவி பெற்று வந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

திரு கோவின் அறிக்கை கடந்த மாதம் 24ஆம் தேதி­யன்று பதிவு செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்பு அப்­பெண் மேற்­கொண்டு உதவி கேட்­க­வில்லை என்று அமைச்சு கூறி­யது.

இந்த அறிக்­கை­யில் கோ திருத்­த­மிட வேண்­டும் என்று பொஃமா சட்­டத்­தின்­கீழ் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி உத்­த­ர­விட்­ட­தாக அமைச்சு தெரி­வித்­தது.

நேற்று காலை நில­வ­ரப்­படி அந்த அறிக்கை தொடர்­பா­கத் தேவை­யான திருத்­தத்தை கோ செய்­து­விட்­ட­தாக தெரி­விக்­கப்

­பட்­டது.