செய்திக்கொத்து

மோசடிக்காரர்களிடம் $2.7 மி. இழந்த குறைந்தது 587 பேர்

இவ்வாண்டு தொடங்கியது முதல் தங்கள் நண்பர்களைப் போல பாசாங்கு செய்து தொலைபேசி மூலம் அழைத்தவர்களிடம் குறைந்தது 587 பேர் ஏமாந்து $2.7 மில்லியனுக்கும் அதிகமான தொகை பறிகொடுத்தாகக் காவல்துறையினர் நேற்று தெரிவித்தனர்.

மோசடிக்காரர்கள் அழைக்கும் தொலைபேசி, கைபேசி எண்களுக்கு முன்பு + எனும் குறியீடு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதுதான் தங்களுடைய புதிய தொடர்பு எண் என்று கூறி மோசடிக்காரர்கள் அவர்களை நம்ப வைத்தனர்.

சில நாள்கள் கழித்து நிதி பிரச்சினையை எதிர்கொள்வதாகக் கூறி அவர்கள் கடன் கேட்டனர். வங்கிக் கணக்கு எண்ணைத் தந்து பணம் அனுப்பி வைக்கச் சொன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.

பணம் அனுப்புவதற்கு தொடர்புகொண்டவர்கள் உண்மையிலேயே தங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தார்தானா என உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது

வரி தொடர்பான மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வருமானத்துக்கு ஏற்ற வரி செலுத்தப்படவில்லை என்றும் குறைவான தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும் பொய் கூறும் மோசடி மின்னஞ்சல்கள் வலம் வருவதாக சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து மீதமுள்ள பணத்தைச் செலுத்தும்படி மோசடி மின்னஞ்சல்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

இத்தகைய மின்னஞ்சல்களை அனுப்புவோரிடம் தனிப்பட்ட விவரங்களை அனுப்ப வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக காவல்துறையிடம் புகார் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வரி செலுத்துபவர்களின் தனிப்பட்ட விவரங்களை மின்னஞ்சல், இணையம் மூலம் கேட்பதில்லை என்று சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் துறை கூறியது.

தஞ்சோங் பகார் விபத்து:

ஜூன் 9ல் மரண விசாரணை

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி அதிகாலை தஞ்சோங் பகாரில் நிகழ்ந்த கார் விபத்தில் ஐந்து ஆடவர்கள் மாண்டனர்.

இதுதொடர்பான மரண விசாரணை வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

சம்பந்தப்பட்ட கார் தஞ்சோங் பகார் சாலையில் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாடு இழந்து அருகில் இருந்த கடைவீடு ஒன்றின்மீது மோதியது. விபத்துக்குள்ளான கார் தீப்பிடித்துக்கொண்டது. இது அனைத்தும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!