$1 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 102 பேர் கைது

$1 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 102 பேர் கைது

1 mins read
9f9c3fed-7732-450d-a7f0-5a5f9c1296d5
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் (படங்கள்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு) -
multi-img1 of 3

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய அதிரடி சோதனையில் கிட்டத்தட்ட $1 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது. 102 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அண்மைய ஆண்டுகளில் பறிமுதலான ஆகப் பெரிய அளவிலான போதைப் பொருள் இது எனக் கூறப்பட்டது.

ஐந்து நாள் சோதனையில் சுமார் 6.2 கிலோ ஹெரா­யின், 20 கிலோ கஞ்சா, 724 கிராம் ஐஸ் ஆகியவற்றோடு மற்ற வகையான போதைப் பொருளும் சிக்கின.

அங் மோ கியோ, பிராடல் ஹில், புக்கிட் பாதோக், யோ சு காங் போன்ற வட்டாரங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் 2,960 ஹெரா­யின் புழங்கிகள், 2,910 கஞ்சா புழங்கிகள், 410 ஐஸ் புழங்கிகள் ஆகியோர் ஒரு வார காலத்துக்குப் பயன்­படுத்தும் அளவுக்குச் சமமானது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சோதனையில் ஒரு 17 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

500 கிரா­முக்கு மேல் கஞ்சா அல்லது 15 கிராம் தூய ஹெரா­யின் கடத்­து­வோர் மரண தண்­ட­னையை எதிர்­நோக்­கக்­கூ­டும்.