சிங்கப்பூரில் கடந்த மாதம், 1983ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாது ஆக அதிகமான வெப்பநிலை பதிவானது.
அதனுடன் கடந்த ஆறு வாரங்களில் வெப்பநிலை பல முறை34 டிகிரி செல்சியசைத் தாண்டியுள்ளது.
சிங்கப்பூரில் ஆக அதிகமாக கடந்த 1983ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று தெங்காவில் 37 டிகிரி செல்சியஸ் பதிவானது.
அதற்கு அடுத்து, சென்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி, அட்மிரல்டி பகுதியில் 36.8 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.
சிங்கப்பூரில் வெப்ப அலை ஏதும் தற்போது இல்லை என்று வானிலை ஆய்வாளர்கள் கூறினர்.
இது வழத்துக்கு மாறான அதிக வெப்ப நிலையும் இல்லை.
ஆனால் பருவ நிலை மாற்றத்தின் தாக்கம் அதிகமாகும் நிலையில், சிங்கப்பூரிலும் உலகம் எங்கும் வெப்பநிலை மேலும் அதிகமாகும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

