கழிவுகளில் இருந்து சிமென்ட்

சிறு­நீர், தொழில்­து­றைக் கழி­வு­கள் ஆகி­ய­வற்­றில் இருந்து புதுப்­பிக்­கக்­கூ­டிய சிமென்ட்­டைத் தயா­ரிக்­கும் முறையை நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழக (என்டியு) ஆய்­வா­ளர்­கள் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

கடற்­க­ரை­களில் மணல் அரிப்­பைக் குறைக்­கும் கட்­டு­மா­னங்­கள், பாலை­வ­னங்­களில் குடி­நீர்த் தேக்­கம் அமைப்­பது போன்­ற­வற்­றில் இதைப் பயன்­ப­டுத்­த­லாம்.

விரி­சல்­க­ளைச் சரி­செய்­ய­வும் பாறைச் சிற்­பங்­கள், சிலை­கள் போன்­ற­வற்­றைச் சீராக்­க­வும் இது கைகொ­டுக்­கும்.

'பயோ­சிமென்ட்' எனப்­படும் இந்­தப் புதிய பொருள், முழுக்க முழுக்க கழி­வுப் பொருள்­களில் இருந்தே தயா­ரிக்­கப்­ப­டு­கிறது.

பாரம்­ப­ரி­ய­மான சிமென்ட் உற்­பத்தி முறை­யில் 1000 டிகிரி செல்­சி­யஸ் வரை வெப்­பம் தேவைப்­படும். ஆனால் சாதா­ர­ண­மான அறை வெப்­ப­நி­லையே இதற்­குப் போதும்.

பாரம்­ப­ரிய முறை­யைப் போன்று இதில் அதி­க­மான கரி­ய­மில வாயு வெளி­யேற்­றம் கிடை­யாது. அத­னால் இது சுற்­றுச்­சூ­ழ­லுக்கு மிக­வும் உகந்­த­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

கழி­வு­களை இதில் மூலப் பொருள்­க­ளா­கப் பயன்­ப­டுத்­து­வ­தால், அவற்றை முறைப்­படி அப்­பு­றப்­ப­டுத்­து­வ­தற்­கான செல­வு­களும் குறை­யும்.

சிறு­நீ­ர், தொழில்­து­றைக் கழி­வு­க­ள் ஆகியவற்றை அமி­லம், நுண்­ணு­யி­ரி­கள் ஆகி­ய­வற்­று­டன் கலக்­கும்­போது கிடைக்­கும் இந்த சிமென்ட் வழக்­க­மான சிமென்ட்­டைக் காட்­டி­லும் உறு­தி­யா­னது என்­கின்­ற­னர் பல்கலையின் ஆய்­வா­ளர்­கள்.

புதுப்­பிப்பு முறை­யில் தயா­ரிக்­கப்­படும் இந்த சிமென்ட், நீடித்த நிலைத்­தன்மை மிக்க பொரு­ளும்­கூட.

தேசி­யப் பூங்­காக் கழ­கம் உள்­ளிட்ட அர­சாங்க அமைப்­பு­கள் சில­வற்­று­டன் இணைந்து ஈஸ்ட் கோஸ்ட் பூங்­காக் கடற்­க­ரை­யில் மணல் அரிப்­பைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­களில் இந்­தப் புதிய சிமென்ட்டை இவர்­கள் சோதித்­து­வ­ரு­கின்­ற­னர்.

எதிர்­கா­லத்­தில் சாலைச் சீர­மைப்பு, சுரங்­கப் பாதை பழு­து­பார்ப்பு போன்ற பெருந்­திட்­டங்­க­ளி­லும் இத­னைச் சோதிக்­கத் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

'பயோ­சிமென்ட்'டில் பெரு­ம­ள­வில் காணப்­படும் கால்­சி­யம் கார்­ப­னேட் பவ­ளப்­பாறை வளர்­வ­தற்கு ஏற்ற பொருள் என்­ப­தால் வருங்­கா­லத்­தில் பவ­ளப்­பாறை வளர்ப்­புத் திட்­டங்­க­ளி­லும் இத­னைப் பயன்­ப­டுத்­து­வது குறித்து ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக ஆய்­வா­ளர்­கள் கூறி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!