முயிஸ்: ஹஜ்ஜுக்கு விண்ணப்பித்த 407 சிங்கப்பூரர்களுக்கும் விசா

முயிஸ் எனப்­படும் சிங்­கப்­பூர் இஸ்­லா­மி­ய சமய மன்­றம், இந்த ஆண்டு ஹஜ்­ஜுப் புனித யாத்­தி­ரைக்கு விண்­ணப்­பித்த 407 சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் விசா பெற்­றுத்­த­ரு­வ­தற்­கான ஏற்­பா­டு­களில் முனைந்­துள்­ளது.

407 பேரும் மன்­றத்­தால் நிய­மிக்­கப்­பட்ட பயண முக­வர்­க­ளி­டம் பதிந்­து­கொண்­ட­வர்­கள் என்று கூறப்­பட்­டது. சவூதி அரே­பிய அர­சாங்­கத்­தி­டம் இருந்து இவர்­க­ளுக்கு விசா பெறு­வ­தன் தொடர்­பில் நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­வ­தாக அது குறிப்­பிட்­டது.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லால் 2020, 2021ஆம் ஆண்­டு­களில் முயிஸ் ஹஜ்­ஜுப் பயண ஏற்­பா­டு­களை நிறுத்­தி­வைத்­தி­ருந்­தது.

முன்­ன­தாக, இந்த ஆண்டு மொத்­தம் ஒரு மில்­லி­யன் யாத்­தி­ரிகர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்று ஹஜ்ஜு, உம்ரா ஆகி­ய­வற்­றுக்­குப் பொறுப்பு வகிக்­கும் சவுதி அரே­பிய அமைச்சு அறி­வித்­தது.

கொவிட்-19க்கு முன்­னர் ஒவ்­வொரு நாட்­டுக்­கும் அனு­ம­திக்­கப்­பட்ட யாத்­திரி­கர்­கள் எண்­ணிக்­கை­யில் 45 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டும் இந்த ஆண்டு அனு­மதி வழங்­கப்­படும் என்­றும் அது தெரி­வித்­தது.

அதன்­கீழ், வழக்­க­மாக 900 சிங்­கப்­பூ­ரர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்­றா­லும் இந்த ஆண்டு 407 பேருக்கு மட்­டுமே அனு­மதி உண்டு.

புனி­தப் பய­ணம் மேற்­கொள்­வோர் 65க்குக் கீழான வய­து­டன் சவூதி அரே­பிய அர­சாங்­கத்­தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கொவிட்-19 தடுப்­பூ­சி­களை முழு­மை­யா­கச் செலுத்­திக்­கொண்­டி­ருப்­பது கட்­டா­யம். சவூதி அரே­பியா கிளம்­பு­வ­தற்கு 72 மணி நேரத்­திற்­குள் கிரு­மித்­தொற்று இல்லை என்­ப­தற்­கான மருத்­து­வச் சான்­றி­தழை அவர்­கள் சமர்ப்­பிக்க வேண்­டும்.

சிங்­கப்­பூ­ரில் இந்த நிபந்­த­னை­க­ளைப் பூர்த்தி செய்­தி­ருந்­தா­லும் 2020ஆம் ஆண்டு ஹஜ்­ஜுப் பய­ணத்­துக்கு விண்­ணப்­பித்­தி­ருந்­த­வர்­க­ளுக்கு முத­லில் வாய்ப்பு வழங்­கப்­படும் என்­பதை முயிஸ் சென்ற மாதம் தெளி­வு­ப­டுத்­தி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!