ஆல்வின் டான்: அதிகமான சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கமயமாக வேண்டும்

ஆல்வின் டான்: அதிகமான சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கமயமாக வேண்டும்

2 mins read
05d80b07-897b-4b4f-88a4-6e584e43086f
கருத்தரங்கில் பேசிய வர்த்தக தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் (இடது) சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகள் பற்றி எடுத்துரைத்தார். படம்: எஸ்ஜி டெக் -

சமை­ய­ல­றைச் சாதன உற்­பத்­தி­யா­ள­ரான 'ரொட்­டி­மெட்­டிக்' நிறு­வ­னம் 'நிஞ்சா வேன்' தள­வாட நிறு­வ­னம் உட்­பட பல சிறிய நிறு­வ­னங்­கள், பெரிய வர்த்­தக வரு­வாயை ஈட்ட மின்­னி­லக்க அலை­யைப் பயன்­ப­டுத்தி, புதிய சந்­தை­க­ளுக்­குச் சென்­றுள்­ளன என்று நேற்று நடை­பெற்ற தொழில்­நுட்­பக் கருத்­த­ரங்­கில் பங­கேற்ற நிபு­ணர்­கள் கருத்­து­ரைத்­த­னர்.

"புதி­தாக தொழில் தொடங்­கும் நிறு­வ­னங்­கள் முதல் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள், சிங்­கப்­பூர் பொரு­ளி­ய­லின் முது­கெ­லும்­பாக விளங்கு­கின்­றன," என்று கூகல் சிங்­கப்­பூர் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ரும் எஸ்­டெக் அமைப்­பின் ஆலோ­ச­க­ரு­மான திரு பென் கிங் தெரி­வித்­தார்.

"கொவிட்-19 பெருந்­தொற்று காலத்­தில், சிங்­கப்­பூர் உட்­பட இந்த வட்­டா­ரத்­தில் உள்ள சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் சமூ­கம், வர்த்­த கத் தொடர்­நி­லை­யைக் கட்­டிக்­காக்க மின்­னி­லக்­கத்­தின் உதவியை நாடி­யது," என்­றார் திரு கிங்.

தென்­கி­ழக்­கா­சிய சந்­தை­யில் இன்­னும் அதிக போட்­டித்­தன்­மை­யு­டன் விளங்க, சிறிய நடுத்­தர நிறு­வ­னங்­கள் எவ்­வாறு தொழில்­நுட்­பம், மின்­னி­லக்­கம் ஆகி­ய­வற்­றைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம் என்­பது பற்­றிய கருத்­த­ரங்­கில் திரு கிங் பேசி­னார்.

'எஸ்ஜி டெக்' அமைப்­பும் கூகல் நிறு­வ­ன­மும் இந்­தக் கருத்­த­ரங்­குக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.

கூகல், தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம், தோட் வொர்க்ஸ் எனும் மென்­பொ­ருள் நிறு­வ­னம், பெய்ன் அண்ட் கம்­பெனி எனும் நிர்­வாக ஆலோ­சனை நிறு­வ­னம் ஆகி­ய­வற்­றின் பேச்­சா­ளர்­கள், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளின் 170 பிர­தி­நி­தி­கள் முன்­னி­லை­யில் பேசி­னர். அவர்­களில் 64 பேர் நேர­டி­யாக நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ற­னர்.

கருத்­த­ரங்­கின் பேச்­சா­ளர்­களில் ஒரு­வ­ரான வர்த்­தக தொழில் துணை அமைச்­சர் ஆல்­வின் டான், இந்­தக் கிரு­மித்­தொற்­றுக்­குப் பிந்­திய சூழ்­நி­லை­யில் சிறிய நடுத்­தர நிறு­வ­னங்­கள் பற்­றிக்­கொள்­ளக்­கூடிய ஒரு துடிப்­பான, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் தொழில்­நுட்­பத்தை உரு­வாக்க அர­சாங்­கம் எடுத்து வரும் முயற்­சி­கள் பற்றி விளக்­கி­னார்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள அனைத்து நிறு­வ­னங்­களில் 99% சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் என்­ப­தைச் சுட்­டிய அமைச்­சர், அவை மின்­னி­லக்­க­ம­ய­மா­வ­தற்கு அர­சாங்­க­மும் பெரிய நிறு­வ­னங்­களும் உத­விக்­க­ரம் நீட்ட வேண்­டும் என்­றார்.

பெருந்­தொற்று தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு, எல்­லை­கள் திறக்­கப்­பட்­டா­லும் மின்னி லக்கமயமாதலுக்கான முக்­கி­யத்­து­வம் வலு­வா­கவே இருக்­கும் திரு டான் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

"கொவிட்-19 நமது சிந்­த­னையை ஒரு­மு­கப்­ப­டுத்த இரு­வ­ழி­களில் உத­வி­யுள்­ளது. ஒன்று, மின்­னி­லக்­க­ம­ய­மா­த­லை­யும் நீடித்த நிலைத்­தன்­மை­யை­யும் மைய­மா­கக் கொண்ட நமது பொரு­ளி­யலை வேகப்­ப­டுத்­து­தல். இரண்டு, மின்­னி­லக்­கம் மற்­றும் பசுமை முயற்­சி­களை மேற்­கொள்­ளு­தல்," என்­றும் அமைச்­சர் விவ­ரித்­தார்.