வாசகர் வட்டம் ஏற்பாட்டில் ‘சுண்ணாம்பு அரிசி’ புதினம் அறிமுகம்

உள்­ளூர் எழுத்­தா­ள­ரும் கல்­வி­யா­ள­ரு­கிய திரு பொன் சுந்­த­ர­ராசு எழு­தி­யுள்ள, 'சுண்­ணாம்பு அரிசி' என்­னும் வர­லாற்­றுப் புதி­னத்­தின் அறி­முக நிகழ்ச்சி இன்று நடை­பெ­ற­வி­ருக்­கிறது. சிங்­கப்­பூர் வாச­கர் வட்டத்தின் ஏற்­பாட்­டில் இந்­நி­கழ்ச்சி இடம்பெறும்.

இரண்­டாம் உல­கப் போர்க் கால­கட்­டத்­தில் தமி­ழர்­கள் அடைந்த இன்­னல்­களை அடிப்­படை­யாக வைத்து இந்­நா­வல் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன் நாவ­லில் சீனச் சமூ­கத்­தி­ன­ருக்கு ஜப்­பா­னி­யர்­க­ளால் இழைக்­கப்­பட்ட கொடு­மை­களும் அநீ­தி­களும் விவ­ரிக்­கப்­பட்­டுள்­ளது. சயாம் எனும் தாய்லாந்தில் மரண ரயில் பாதை போடு­வ­தற்கு வல்­லந்­த­மாக ஆள்­களைப் பிடித்­துச் சென்ற இரக்­க­மற்ற செயல்­களும் கோடி­காட்­டப்­பட்­டுள்­ளது.

இந்த நூல் அறி­முக நிகழ்ச்­சி­யில் வளர்­த­மிழ் இயக்­கத்­தின் தலை­வர் திரு சு மனோ­க­ரன் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்துகொள்­கிறார்.

திரு­மதி சுந்­தரி சாத்­தப்­பன் தமிழ்­வாழ்த்­துப் பாட­லோடு நிகழ்ச்சி தொடங்­கு­கிறது. வாச­கர் வட்­டத்­தின் தலை­வர் திரு­மதி சித்ரா ரமேஷ் வர­வேற்­பு­ரை­யாற்ற முனை­வர் சுப திண்­ணப்­ப­ன், சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் தலை­வர் திரு நா ஆண்­டி­யப்­பன், 'தி சிராங்­கூன் டைம்ஸ்' மாத இத­ழின் முதன்­மை­யா­சி­ரி­ய­ரும் இலக்­கிய விருது பெற்ற எழுத்­தா­ள­ரு­மான திரு ஷா நவாஸ் ஆகி­யோர் வாழ்த்­துரை வழங்­கு­வர்.

சிங்­கப்­பூ­ரில் கலா­சார விருது' பெற்ற முன்­னணி மூத்த எழுத்­தா­ளர் திரு இராம கண்­ண­பி­ரானின் காணொளி வாழ்த்­தும் இடம்பெறும்.

அத்­து­டன் இலக்­கிய விரு­து­கள் பெற்ற எழுத்­தா­ளர்­கள் திரு­மதி ஹேமா, திரு­மதி அழ­கு­நிலா இரு­வ­ரும் வாச­கர் உரை நிகழ்த்­து­வர்.

மேலும் தமிழ்­நாட்­டின் சம­கால மிகச்­சி­றந்த இலக்­கிய ஆளு­மை­களில் ஒரு­வ­ரான திரு சாரு நிவேதா ஸூம் தளத்தில் தோன்றி நூலைப் பற்­றிய தமது கருத்­தைக் கூற­வி­ருக்­கி­றார். செல்வி மஜா­ஜ­பீன் நிகழ்ச்­சி­யைத் தொகுத்து நெறிப்­ப­டுத்­த­வார்.

நிகழ்ச்சி நடை­பெறும் விவ­ரங்­கள்.

நாள்: இன்று, சனிக்­கி­ழமை 14.05.2022

இடம்: போட் (16வது மாடி) தேசிய நூல­கம், 100 விக்­டோ­ரியா ஸ்திரீட்

நேரம்: மாலை 6.00 மணி

இணை­யத் தொடர்பு: https://bit.ly/SunnambuArisi

Meeting ID: 818 7851 1680 Passcode: 123456

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!