தனியார் நிறுவனமான எஸ்பிஎச்

தனியார் நிறுவனமான எஸ்பிஎச்

1 mins read
59dfdc36-e4b1-4292-83bd-3d21818c5bbc
சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ், (எஸ்பிஹெச்) ஆசிய ஊடக விருது நிகழ்ச்சியில் நான்கு பிரிவுகளில் எட்டு விருதுகளை வென்றுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்), அதிகாரபூர்வமாக சிங்கப்பூர் பங்குச் சந்தையிலிருந்து விலக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனம் 38 ஆண்டுகளாக சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இடம்பெற்று வந்தது.

இதைத் தொடர்ந்து எஸ்பிஎச்சின் தலைமை நிர்வாக அதிகாரி இங் யாட் சுங், வரும் திங்கட்கிழமையன்று (16 மே) பதவி விலகுவார்.

அன்று முதல் கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் சிறப்புத் திட்டங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரி ஜெரல்ட் யோங் அந்தப் பொறுப்பை வகிப்பார் என்று எஸ்பிஎச் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டது.

அந்த மின்னஞ்சலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்த்தது.

எஸ்பிஎச்சின் இதர இயக்குநர்களும் பதவி விலகுவர். புதிய இயக்குநர்கள் நியமிக்கப்படுவர்.

முன்னதாக எஸ்பிஹெச்சின் ஊடகப் பிரிவுகள் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் எனும் லாப நோக்கில்லா அமைப்பாகப் பிரிக்கப்பட்டன.

தற்போது சொத்துச் சந்தை, முதியோர் பராமரிப்பு வசதிகள் போன்ற இதர பிரிவுகளை உள்ளடக்கும் எஸ்பிஎச், இனி கஸ்கேடன் பீக் முதலீட்டு நிறுவனத்திற்குச் சொந்தமாகும்.