நோயாளிக்குச் சேவையாற்றும் ஊழியருக்கு பேராதரவு தேவை

அமைச்சர்: பராமரிப்பவர்கள் நலமாக இருந்தால்தான் மற்றவர்களைக் கவனிக்க முடியும்

நீரி­ழிவு நோய்க்கு எதி­ரான போராட்­டத்­தில் அத்­த­கைய நோயா­ளி­க­ளுக்­குச் சேவை­யாற்­றும் பரா­ம­ரிப்­பாளருக்கு ஆத­ரவு அளிக்க வேண்­டி­யது மிக முக்­கி­ய­மான ஒன்று என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்து இருக்­கி­றார்.

நீரி­ழிவு நோய்க்கு எதி­ரான தேசிய போராட்­டத்­தில் நோயா­ளி­களைப் பரா­ம­ரிக்­கும் ஊழி­யர்­களுக்கு ஆத­ரவு அளிக்­கும் வகையில் உள்­கட்­ட­மைப்பு வச­தி­களும் சமூ­க­மும் இங்கு இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

நீரி­ழிவு நோயா­ளி­க­ளைப் பரா­ம­ரிக்க வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது. அவர்­க­ளைப் பரா­ம­ரிக்­கும் ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்க வேண்­டி­யது அதை­விட முக்­கி­ய­மா­னது என்று திரு சான் வலி­யு­றுத்தினார்.

பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் இல்லை என்­றால் நோயா­ளி­களைக் கவனிக்க இய­லாது என்­றா­ர­வர்.

பரா­ம­ரிப்­பா­ள­ருக்கு உடல்­நிலை சரி­யில்லை என்­றால் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை இரண்­டா­கி­வி­டும் என்று அவர் தெரி­வித்­தார்.

நீரி­ழிவு தவிர்ப்பு, பரா­ம­ரிப்பு பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வரான திரு சான், செந்­தோ­சா­வில் நேற்று 'டயாபிடிஸ் சிங்­கப்­பூர்' என்ற அறப்­பணி அமைப்பு முதன்­மு­த­லாக ஏற்­பாடு செய்த சைக்­கி­ளோட்ட நிகழ்ச்­சி­யில் பேசி­னார். அந்த நிகழ்ச்சியில் உடற்­கு­றை­யா­ளர்­கள் உட்­பட ஏறத்­தாழ 300 சைக்­கி­ளோட்­டி­கள் கலந்­து­கொண்­ட­னர்.

அவர்­கள் 4 கி.மீ. அல்­லது 20 கி.மீ. தொலைவை சைக்­கி­ளில் கடந்­த­னர்.

சிங்­கப்­பூர் 2016ல் நீரி­ழிவு நோய்க்கு எதி­ரான போராட்­டத்தை அறி­வித்­தது. 2025வது ஆண்டு வாக்­கில் சிங்­கப்­பூர் வாசி­களில் நான்கு பேரில் ஒரு­வ­ருக்கு நீரி­ழிவு ஏற்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு இருக்­கும். ஐந்­தில் ஒரு­வ­ருக்கு நீரி­ழிவு நோய் இருக்­கும் என்று 2017ல் நடத்­தப்­பட்ட ஓர் ஆய்வு தெரி­விக்­கிறது.

இளம் வய­தி­லேயே முறை­யான உடற்­ப­யிற்சி, உடல்­ந­லத்­துக்கு ஏற்ற உணவு ஆகி­ய­வற்­று­டன் சரி­யான அணு­கு­மு­றையை, வாழ்க்­கை பாணி­யைக் கைக்­கொள்ள வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது என்று­ திரு சான் வலி­யு­றுத்­தி­னார்.

ஒரு­வ­ரின் வயது எப்­படி இருந்­தா­லும் அவர் நல­மான வாழ்க்­கை பாணியைக் கைக்­கொள்ள முடி­யும் என்றும் அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!