அவசரகால நடவடிக்கை கட்டத்தில் டெங்கி; 2022ல் 8,000 பேர் பாதிப்பு

அவசரகால நடவடிக்கை கட்டத்தில் டெங்கி; 2022ல் 8,000 பேர் பாதிப்பு

2 mins read
75e0cf3a-1e9f-43f7-a058-14d648595bff
-

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்­டின் முதல் ஐந்து மாதங்­களில் 8,000க்கும் மேற்­பட்­டோர் டெங்கிக் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்த எண்­ணிக்கை, சென்ற ஆண்டு முழு­வ­தும் பதி­வான 5,258ஐவிட கணி­ச­மான அளவு அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சிங்­கப்­பூ­ரில் பொது­வாக ஜூன், அக்­டோ­பர் மாதங்­க­ளுக்கு இடைப்­பட்ட காலத்­தில்­தான் டெங்கி தொற்று அதி­க­மாக இருக்­கும்.

ஆனால் அந்­தக் காலம் வரு­வ­தற்கு முன்­னரே தொற்று எண்­ணிக்கை இவ்­வ­ளவு அதி­க­மாக இருப்­பது கவலை தரும் ஒன்று என நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் கூறி­யுள்­ளார்.

உட்ஸ்­வேல் கூட்­டு­ரிமை வீட்டு வளா­கத்­திற்­குச் சென்­ற­போது அவர் இவ்­வாறு கூறி­னார். உட்­லண்ட்ஸ் டிரைவ் 72ல் இருக்­கும் இப்­ப­குதி, டெங்கி தொற்­று அதி­க­ம் உள்ள பகு­தி­களில் ஒன்று.

கடந்த மார்ச் மாதம் இங்கு முதல்­மு­த­லாக ஒரு­வ­ருக்கு டெங்­கிக் காய்ச்­சல் ஏற்­பட்­டது. இப்­போது 96 பேர் பாதிக்­கப்­பட்­டு உள்­ள­னர்.

"வாரந்­தோ­றும் தொற்று எண்­ணிக்கை கணி­ச­மாக அதி­க­ரித்து வரு­கிறது. தொற்று எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரிக்­கா­மல் பார்த்­துக்­கொள்ள அவ­ச­ர­கால நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டிய காலகட்டம் இது," என்று உள்­துறை துணை அமைச்­ச­ரு­மான திரு டான் கூறி­னார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை நில­வ­ரப்­படி சென்ற வாரம் 1,055 பேர் டெங்கிக் காய்ச்­ச­லுக்­குப் பாதிக்­கப்­பட்­ட­தாக தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் தெரி­வித்­தது.

மேலும், இது­வரை 280 டெங்கி தொற்­றுக் குழு­மங்­கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளன. சென்ற மாத இறு­தி­யில் இந்த எண்­ணிக்கை 196ஆக இருந்­தது.

கடந்த ஜன­வரி மாதம் முதல் சென்ற மாதம்வரை தேசிய சுற்­றுப்­புற வாரியம் தீவு முழு­வ­தும் 243,000 சோத­னை­களை நடத்­தி­யது. கட்டு­மா­னத் தளங்­களில் நடத்­தப்­பட்ட சுமார் 1,900 சோத­னை­களும் அவற்­றில் அடங்­கும்.

கிட்­டத்­தட்ட 7,100 கொசுக்­கள் இனப்பெருக்க இடங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டன. ஏடீஸ் கொசுக்­கள் இனப்பெருக்­கத்­தில் ஈடு­படும் இடங்­களில் 60 விழுக்­காட்டு இடங்­கள் வீடு­களில் இருப்­ப­தா­க­வும் தெரியவந்­துள்­ளது.