மிரட்டல் மென்பொருள்: காவல்துறை எச்சரிக்கை

மிரட்டல் மென்பொருள்: காவல்துறை எச்சரிக்கை

1 mins read
4de1eb34-9dd3-4e2c-8760-fcca3c37b191
-

காவல்­துறை, சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு முக­வை­யு­டன் சேர்ந்து பொது­மக்­களை எச்­ச­ரித்துள்ளது.

கணி­னி­யின் இயங்கு­த­ளத்தைப் (OS) புதுப்­பித்­துக்கொள்­ளும்­படி கேட்டு போலி­யான ஓர் இணைப்பு இணை­யத்­தில் புழக்­கத்­தில் விடப்­படு­கிறது. மின்­னஞ்­சல் வழி­யா­க­வும் அது அனுப்­பப்­ப­டு­ம். அதைப் பதி­வி­றக்­கம் செய்­தால் அத­னு­டன் சேர்ந்து 'மேக்­னி­பர்' என்ற மிரட்­டல் மென்­பொ­ருள் ஒன்­றும் உங்­கள் கணி­னிக்­குள் புகுந்­து­வி­டும்.

அது கணி­னி­யில் இருக்­கும் உங்­கள் தக­வல்­களை முடக்­கி­விடும். வங்­கிக் கணக்­கு­கள், சமூக ஊடக கணக்­கு­கள், படங்­கள், காணொ­ளி­கள் போன்­றவை எல்­லாம் மோச­டிப்­பேர்­வ­ழி­கள் வசம் போய்­வி­டும். அவற்­றைப் பயன்­படுத்தி அந்­தப் பேர்­வ­ழி­கள் பணத்தை திரு­டி­வி­டு­வார்­கள்.

அல்­லது உங்­கள் தக­வல்­க­ளைப் பயன்­ப­டுத்தி அவர்­கள் மோசடி வேலை­களில் ஈடு­ப­டு­வார்­கள்.

கணினி பழை­ய­படி செயல்­பட வேண்­டு­மா­னால் பணத்தை இணைய நாணய வடி­வில் அனுப்­பும்­படி அவர்­கள் மிரட்­டு­வார்­கள்.

ஆகையால் எச்சரிக்கையாக இருந்து கொள்ளும்படி பாது­காப்பு மென்­பொருளைப் பயன்­ப­டுத்­தும்­படி அவை ஆலோ­சனை கூறின.