தனிநபர் நடமாட்டச் சாதனம், மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தை அடுத்து 54 வயது விநியோக வாகன ஓட்டுநர் மரணம் அடைந்துவிட்டார்.
இந்த விபத்து அப்பர் சிராங்கூன் ரோட்டை நோக்கிச் செல்லும் சிராங்கூன் ரோட்டில் வாம்போ ஈஸ்ட்டுக்கு அப்பால் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11 மணிக்கு நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்தது.
தனிநபர் நடமாட்டச் சாதனத்தை ஓட்டி வந்தவர் சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டார்.
காவல்துறை புலன்விசாரணை தொடர்கிறது.
சம்பவம் நிகழ்ந்த இடத்தைவிட்டு மோட்டார்சைக்கிளோட்டி ஓடிவிட்டார் என்று சந்தேகிக்கப்படுவதாக ஷின் மின் டெய்லி நாளிதழ் தெரிவித்துள்ளது.

