24 வயது மாது கைதானார்

24 வயது மாது கைதானார்

1 mins read
a51e4d0d-f9f9-411a-b4a7-8f142d08efc8
-

மஞ்­சள்­நிற மெர்­சி­டிஸ்-பென்ஸ் கார் ஒன்று சனிக்­கி­ழமை இரவு ஃபேர்மோண்ட் ஹோட்­டல் மீது மோதி பல­வற்­றை­யும் இடித்து தள்ளிவிட்­டது.

குடித்­து­விட்டு வாக­னம் ஓட்­டிய சந்­தே­கத்­தின் பேரில் தாங்­கள் 24 வயது மாதை கைது செய்து இருப்­ப­தாக காவல்­துறை அதி­காரி­கள் கூறி­னர்.

எண் 80 பிராஸ் பாசா ரோட்டில் இரவு சுமார் 11.50 மணிக்கு இந்தச் சம்­ப­வம் நிகழ்ந்­த­தாக காவல்­துறைக்குத் தக­வல் கிடைத்­தது.

கார் மோதல் சம்­ப­வத்­தில் யாருக்­கும் காய­மில்லை. புலன்­வி­சா­ரணை தொடர்ந்து நடந்து வரு­கிறது. அந்த ஹோட்­ட­லுக்கு எதிரே சுற்­றுப்­பா­தை­யில் கார் திரும்­பியபோது கட்­டுப்­பாட்டை இழந்­து­விட்­ட­தாக ஷின் மின் டெய்லி நாளி­தழ் தெரி­வித்­தது. பென்ஸ் காரின் முன்பாகம் சேதம் அடைந்தது.