'உணவகங்களின் செயல்பாடுகள் மேம்பட மின்னிலக்க உணவுப் பட்டியல் உதவுகிறது'

'உணவகங்களின் செயல்பாடுகள் மேம்பட மின்னிலக்க உணவுப் பட்டியல் உதவுகிறது'

2 mins read
5e135997-d884-4dfb-8536-163d4de15af9
-

கொவிட்-19 தொற்று கார­ண­மாக அதிக உண­வ­கங்­கள் தொழில்­நுட்­பத்­தைத் தழுவிக் கொண்­டன.

ஓர் உண­வ­கத்­தில் என்­னென்ன உணவு கிடைக்­கும் என்­பதை கியூ­ஆர் குறி­யீட்டை வருடி தெரிந்­து­கொள்ளும் ஒரு தொழில்­நுட்­பம் கொவிட்-19க்குப் பிந்­திய வருங்­காலத்­தி­லும் கைக்­கொள்­ளப்படும் என்று பல உண­வ­கங்­கள் தெரி­வித்­த­தாக சண்டே டைம்ஸ் குறிப்­பிட்டு உள்­ளது.

வாடிக்­கை­யா­ளர்­களில் சிலர் வழக்­கமான உணவு விவர குறிப்பேடுகளைப் பார்த்து தங்­க­ளுக்­குத் தேவை­யான உணவைத் தேர்ந்­தெ­டுக்­கவே விரும்­பு­கிறார்­கள் என்­றா­லும் மின்­னி­லக்க ரீதி­யிலான உண­வுப் பட்­டி­யல் தாங்­கள் சிறப்­பா­கச் செயல்­பட உதவி இருப்­ப­தாக உண­வகங்­கள் கூறு­கின்­றன. சண்டே டைம்ஸ் 12 உண­வ­கங்­க­ளைச் சந்­தித்­தது. அவற்­றில் 10 உண­வ­கங்­கள் கியூ­ஆர் குறி­யீட்டு உண­வுப் பட்­டி­ய­லைப் பயன்­ப­டுத்­து­கின்­றன.

சாப்­பாட்டு மேசை­யில் கியூ­ஆர் குறி­யீட்டை காட்­டும் ஓர் அச்­சுத்­தாள் வைக்­கப்­பட்டு இருக்­கும். வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­கள் மின்­னி­லக்கச் சாத­னத்­தின் மூலம் அதை வருடலாம்.

அப்­படி செய்­யும்­போது அந்த உண­வ­கத்­தில் என்­னென்ன சாப்­பாடு கிடைக்­கும் என்­பதை வாடிக்கையாளர்கள் தெரிந்­து­கொள்­ள­லாம். அதைப் பார்த்து தேவை­யா­னதை கேட்டு வாங்கி சாப்­பி­ட­லாம்.

பணத்தை மின்­னி­லக்­கம் மூலம் அல்­லது நேர­டி­யாக காசாளரிடம் செலுத்­தி­வி­ட­லாம்.

கியூ­ஆர் குறி­யீடு பல­ரும் தொடக்­கூடிய ஒரு தரை­யையோ, மேசை­யையோ பயன்­படுத்த வேண்­டிய தேவையை குறைத்­து­வி­டு­கிறது என்று சிங்­கப்­பூர் உண­வ­கச் சங்­கத்­தின் பேச்­சா­ளர் கூறி­னார்.

கியூ­ஆர் குறி­யீடு மூலம் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் கருத்­து­க­ளை­யும் உண­வ­கங்­கள் பெற­மு­டி­யும்.

இத­னி­டையே, 14 வாடிக்­கை­யா­ளர்­களில் ஐந்து பேர் தாங்­கள் வழக்­க­மான கையேடு வடி­வி­லான உண­வுப் பட்­டி­ய­லைப் பார்த்து தேவை­யான உணவை வாங்கி உண்ண விரும்­பு­வ­தா­கக் கூறி­னர்.

உண­வுப் பட்­டி­யல் மின்­னி­லக்க ரீதி­யில் இருந்­தா­லும் அச்­சி­டப்­பட்ட கையேடு வடி­வில் இருந்­தா­லும் எல்­லாம் ஒன்றுதான் என்று மற்­ற­வர்­கள் தெரி­வித்­த­னர்.

தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தால் தங்­கள் செயல்­பா­டு­கள் மேம்­பட உதவி கிடைத்து இருக்­கிறது என்று அதி­க­மான உண­வ­கங்­கள் தெரி­வித்­தன.

தொழில்­நுட்­பங்­கள் கார­ண­மாக ஊழி­யர்­க­ளைச் சிறந்த முறை­யில் பணி­யில் பிரித்து அமர்த்த முடி­வ­தா­க­வும் அவை குறிப்­பிட்­டன.

இருந்­தா­லும் சில உண­வ­கங்­கள் வழக்­க­மான கையேடு வடி­வி­லான உண­வுப் பட்டி­ய­லைத் தொடர்ந்து பயன்­ப­டுத்தவே விரும்­பு­வ­தாக தெரி­வித்­தன.

'ஃபியுஷன்­பொ­லிஸ் வே' கட்­ட­டத்­தில் செயல்­படும் 'ரெஸ்­டா­ரெண்ட் பைட்­ரா­சண்டா' என்ற இத்­தா­லிய உண­வ­கத்­தின் உரி­மை­யா­ள­ரான திரு லோரிஸ் மாசி­மினி, மின்­னி­லக்க உண­வுப் பட்­டி­ய­லைப் பயன்­படுத்­து­வ­தால் பல நன்­மை­கள் இருக்­கின்­றன என்­பதை ஒப்­புக்­கொண்­டார்.

இருந்­தா­லும்­கூட கையேடு வடி­வி­லான பட்­டி­யல் கார­ண­மாக தன்­னு­டைய உண­வ­கமும் விருந்­தி­னர்­களும் நேரடியாகக் கலந்து­ற­வாட முடி­யும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

மின்­னி­லக்­கப் பட்­டி­ய­லைப் பயன்­ப­டுத்­தும் வாடிக்­கை­யா­ளர்­கள், தங்­க­ளு­டைய கைபே­சி­யைப் பார்த்தே தேவை­யான உணவை முடிவு செய்­து­வி­டு­வார்­கள்.

ஆனால் எங்­கள் உண­வ­கத்­தில் மனி­தர்­க­ளுக்கு மனி­தர்­கள் இடைப்­பட்ட அன்­பு­றவு இருக்க வேண்­டும் என்று விரும்­பு­கி­றோம். உண­வ­கங்­களில் இத்­த­கைய அன்­பு­றவே அடிப்­ப­டை­யான ஒன்று என்று அவர் குறிப்­பிட்­டார்.