பல திருப்பங்களைச் சந்தித்தவர், மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த விழைகிறார்

பல திருப்பங்களைச் சந்தித்தவர், மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த விழைகிறார்

2 mins read
201767e2-a229-481f-b854-b1d68db2a6c3
-

சமூ­கத்­தில் சமத்­து­வத்தை ஏற்­படுத்­து­வ­தையே இலக்­கா­கக் கொண்­டுள்­ளார் சுவாதி நாயர்.

நீ ஆன் பல­து­றைத்­தொ­ழிற்­கல்­லூ­ரி­யில் மக்­கள் தொடர்­புத்­து­றை­யில் பட்­ட­யம் பெற்­றுள்ள இவர், கல்­விக்கு அப்­பா­லும் பள்ளி, சமூக நிகழ்ச்­சி­களில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டார். பல­து­றைத்­ தொ­ழிற்­கல்­லூ­ரிக்கு முன்பு தேசிய தொடக்­கக்­கல்­லூரி­யில் ஒருங்­கி­ணைந்த பாடத்­திட்­டத்­தில் சுவாதி பயின்­றார்.

வழக்­க­றி­ஞ­ராக வேண்­டும் என்ற சிறுவயது கனவோடு இருந்த இருந்த இவர், ஒருங்­கி­ணைந்த பாடத்­திட்­டத்­தைத் தேர்ந்­தெ­டுத்­தார். தொடக்­கக்­கல்­லூ­ரி­யில் ஐந்­தாம் ஆண்­டைத் தொடங்­கி­ய­போது கல­வை­யான பாடங்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்க விரும்­பிய சுவா­திக்கு அவ்­வாறு செய்ய வாய்ப்பு அமை­ய­வில்லை.

தொடக்­கக்­கல்­லூ­ரி­யில் படித்­த­போது பெரும்­பா­லான பாடங்­களில் இவ­ருக்கு நாட்­டம் இல்­லா­த­தால் சிறந்த மதிப்­பெண்­கள் பெற முடி­யா­மல் சிர­மப்­பட்­டார்.

இத­னால் தொடக்­கக்­கல்­லூ­ரிக் கல்­வியை நிறுத்த இவர் முடி­வு எ­டுத்­தார். இவ­ரு­டைய பெற்­றோர்­ இம்­முடிவை முத­லில் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்­றா­லும் தமக்கு மக்­கள் தொடர்­புத்­து­றை­யில் சேர ஆர்­வம் இருப்­ப­தாக அவர்­க­ளி­டம் எடுத்­துச்­சொன்­ன­போது சுவா­தி­யின் விருப்­பத்­திற்கு அவர்­கள் ஆத­ர­வ­ளித்­த­னர்.

நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் சேர்ந்த சுவாதி, கல்வி­யில் மட்­டு­மல்­லா­மல், சமூ­கச் சேவை­யி­லும் இணைப்­பாட நட­வ­டிக்­கை­க­ளி­லும் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.

இந்­தி­யா­வில் பெண்­களை ஆண்­கள் பாலி­யல் வன்­கொடுமை செய்­யும் கொடூ­ரம் பற்றி செய்­தி­களில் படித்த சுவாதி வேதனை அடைந்­தார். இது­போன்ற அநீ­தி­களைத் தடுக்க வேண்­டும் என்ற வெறி இவ­ருள் எழுந்­தது.

மலா­வி­யில் உள்ள ஆத­ர­வற்­றோ­ருக்­கான இல்­லம் ஒன்­றில் வசிக்­கும் சிறு­வர்­க­ளுக்கு உதவ நன்­கொடை இயக்­கத்தை நடத்தி அதில் கிடைத்த பணத்தை அவர்­களி­டம் சுவாதி வழங்­கி­னார்.

அந்த இல்­லத்­தில் வசிக்­கும் சிறு­வர்­களோ­டும் அங்கு பணி­புரி­பவர்­களோ­டும் இவர் நெருக்­க­மான உறவை வளர்த்­துக்­கொண்­டார். அவ்­வப்­போது அவர்­கள் சுவா­திக்கு தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொள்­வது இவ­ரு­டைய மனதை நெகிழ வைத்­துள்­ளது.

சமூக சேவை­யில் இறங்­கி­ய­தோடு பல­த­ரப்­பட்ட நிகழ்ச்­சி­க­ளை­யும் ஏற்­பாடு செய்­துள்­ளார் சுவாதி. 'ஸ்டேஜ்52' என்­னும் இணைப்­பாட நட­வ­டிக்­கை­யின் தலை­வ­ராக இருந்த இவர், நாடக நிகழ்ச்­சி­கள் உட்­பட பல்­வேறு நிகழ்ச்­சி­களை நடத்­தி­னார்.

கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் இவர் நடத்திய நிகழ்ச்சி களுள், 'ஹெலொவின்' கொண் டாட்ட நிகழ்ச்சி தமக்குப் புது மையான அனுபவத்தை தந்துள் ளதை நினைவுகூர்ந்தார்.

"கல்­விப் பய­ணத்­தில் நான் பல திருப்­பங்­களை எதிர்­நோக்­கி­னேன். அவற்­றைத் தோல்வி­களாக எண்ணா­மல் நான் வெல்ல வேண்­டிய சவால்­களாக நினைத்­துக்­கொண்­ட­தால் தான் இன்று சிறப்பு தேர்ச்­சி­ய­டைந்த

மாண­வர்களுள் ஒரு­வ­ரா­கி­யுள்­ளேன்," என்­றார் சுவாதி.

மக்­க­ளின் வாழ்க்­கை­யில் மாற்­றத்­தைக் கொண்­டு­வர வேண்­டு­மென ஆவ­லு­டன் இருக்­கும் சுவாதி, பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பொதுக் கொள்­கைப் படிப்பை மேற்­கொள்­ள­வி­ருக்­கி­றார்.