பெருந்தொற்று சோர்வால் உதவி எண்களை அழைக்கும் மூத்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொவிட்-19 பெருந்தொற்றின் முதல் ஆண்டைவிட இரண்டாவது ஆண்டு அதிகமாக மூத்தோர் சமூக நல முகவைகள் இயக்கும் உதவி அழைப்பு எண்களுக்கு அழைத்து உதவி நாடியுள்ளனர்.
பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள சோர்வு, நிலைத்தன்மையின்மை காரணங்களால் அவசர உதவி எண்களை அவர்கள் அழைத்துள்ளனர்.


கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறித்த கவலைகள், இதனால் ஏற்படும் நீண்ட கால விளைவுகள், அதனைக் கையாள்வதனால் ஏற்படும் சோர்வு போன்ற பிரச்சினைகளுக்காகத் தங்களுக்கு அந்த மூத்தோர் அழைத்தனர் என்று அந்த முகவைகள் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.


மூத்தோருக்காக ஆலோசனை சேவைகளையும் அவசர எண் சேவைகளையும் இயக்கும் சேஜ் கவுன்சலிங் நிலையம் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரை 11,912 அழைப்புகள் வந்தன என்றும் அதற்கு முந்தய காலகட்டத்தில் 10,365 அழைப்புகளைத் தாங்கள் கையாண்டதாகவும் நிலையம் குறிப்பிட்டது. இது 15 விழுக்காடு அதிகம்.


சில்வர் ரிப்பன் அமைப்புக்கு அழைக்கும் மூத்தோரின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளன. டச் சமூக சேவைகள் அமைப்பு 9% அழைப்பு அதிகரிப்பைக் கண்டது.
டச் சமூக சேவைகள் அமைப்பு மூத்தோருக்கும் இதர பிரிவினருக்கும் சேவை ஆற்றுகிறது. சில்வர் ரிப்பன் அமைப்பு மனநல பிரச்சினை உடையோருக்கு இலவ்ச ஆலோசனை வழங்குகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 7 முதல் ஜூன்1 வரை கொவிட்-19 கோய்க்கிருமி பரவலைக் கட்டுப்படுத்த 'சர்கிட் பிரேக்கர்' கட்டுப்பாடு தளர்வுகள் அமலாக்கப்பட்டன.
2020ல் சிங்கப்பூரில் கிருமித்தொற்று தாக்கியபோது, ​​பெரும்பாலான முதியவர்கள் தங்கள் குடும்பத்தினரின் அறிவுறுத்தலின்படி 2021லும் வீட்டிலேயே தங்கியிருந்தனர் என்று கூறினார் சேஜ் ஆலோசனை நிலையத்தின் நிர்வாக இயக்குனர் திருமதி கிரேஸ் லீ.


"பல முதியவர்கள் தனியாக வாழ்ந்து வந்ததால் சோர்வு ஏற்பட்டது; அதனால் கவலையும் பயமும் அதிகரித்ததுடன் தொற்றுநோய் எவ்வளவு காலம் நீடிக்கும் நிச்சயமற்ற நிலையை உணர்ந்தவர்களாக இருந்தனர்," என்று அவர் கூறினார்.

"சிலர் முன்பை விட அடிக்கடி எங்களை அழைப்பதை நாங்கள் கவனித்தோம், அவர்கள் வீட்டில் தனியாக இருப்பதால் தங்கள் நேரத்தை எப்படி செலவிடுவது என்று தெரியாமல் தவித்தனர்," என்றும் அவர் குறிப்பிட்டார்.


இவ்வாண்டு ஏப்ரல் 26 முதல் எந்த குழு அளவிலான கட்டுப்பாடும் இல்லாமல் சிங்கப்பூரர்கள் ஒன்றுகூட வழிபிறந்தது. வெளிப்புறங்களில் முகக்கவசம் அணிவதும் கட்டாயம் ஆக்கப்படவில்லை.
இதனால் நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!