ஜூவல் சாங்கி கடைத்தொகுதியில் உள்ள பர்கர் அண்ட் லாப்ஸ்டர் கிளை அடுத்த அடுத்த அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
உணவகத்தில் தயாரிக்கப்பட்ட உணவை உண்ட 17 பேருக்கு குடல் அழற்சி ஏற்பட்டது.
மே 7 முதல் மே 15 வரையிலான காலத்தில் உணவகத்தில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட 17 பேரை குடல் அழற்சி பாதித்த ஆறு சம்பவங்கள் நடந்தன.
அவை குறித்து விசாரித்து வருவதாக சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு முகவையும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் வீடு திரும்பி விட்டார். மற்ற மூவருக்கும் உடல்நிலை சீராக உள்ளது.
மற்றவர்கள் வெளிநோயாளி சிகிச்சை, சுய மருந்து பெற்றனர் அல்லது சிகிச்சையின்றி குணமடைந்தனர்.


