கலாசாரப் பிணைப்பும் சிங்கப்பூர் சாதனைகளும்

கலாசாரப் பிணைப்பும் சிங்கப்பூர் சாதனைகளும்

2 mins read
c85eef1c-3c28-4e6d-a3e5-292f45ce9960
நீ சூன் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகரான குமாரி கேரி டான், நீ சூன் சவுத் சமூக மன்றத்தில் குடிமக்களுடன் சேர்ந்து பஞ்சினால் கோலம் வரைகிறார் (இடது கோடி). படம்: நீ சூன் சவுத் இந்தியர் நற்பணி செயல்குழு -

நீ சூன் வட்­டார மக்­க­ளு­டன் கைகோத்து, நீ சூன் சவுத் இந்­தி­யர் நற்­ப­ணிச் செயல்­குழு சிங்­கப்­பூர் சாதனை புத்­த­கத்­தில் இரண்டு சாத­னை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஒன்று, ஆக அதி­க­மான, ஏறக்­கு­றைய 10,000 சாப்ஸ்­டிக் குச்­சி­க­ளைக் கொண்டு ரங்­கோலிக் கோலத்தில் புலியை வடி­வ­மைத்­தது.

மற்­றது, ஒரே நேரத்­தில் ஆக அதி­க­மான 110 பேர் ரங்­கோலி வடி­வி­லான ஓவி­யங்­களை பஞ்­சைக் கொண்டு உரு­வாக்­கி­யது.

இரு சாத­னை­களும் கடந்த சனிக்­கி­ழமை படைக்­கப்­பட்­டன.

சீனர்­க­ளின் சந்­தி­ர­மு­றைப்­படி இந்த ஆண்டு புலி என்­ப­தால், சாப்ஸ்­டிக் குச்­சி­க­ளால் ஆன ரங்­கோலி புலியை வடி­வ­மைத்­த­னர் பங்­கேற்­பா­ளர்­கள்.

சிங்­கப்­பூ­ரின் தனித்­து­வ­மான கலா­சார பன்­மு­கத்­தன்­மை­யைப் பிர­தி­ப­லிக்­கும் வகை­யில், அனைத்து இன மக்­களும் இணைந்து சாத­னை­கள் படைக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்­ட­தாக நீ சூன் சவுத் இந்­தி­யர் நற்­ப­ணிச் செயல்­கு­ழுத் தலை­வர் சித்­திரா துரை­சாமி தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் சுதந்­தி­ரம் அடைந்து இவ்­வாண்டு 57 ஆண்­டு­கள் ஆகப்­போ­வதை குறிக்க 57 ஓவி­யங்­கள் வரை­யப்­பட்­டன. இந்த ஓவி­யங்­களை பஞ்­சைக் கொண்டு 110 பேர் உரு­வாக்­கி­னர்.

"அனைத்து இன மக்­க­ளு­டன் இணைந்து இதுபோன்ற செயல்­பாடு­களில் ஈடு­ப­டு­வது அவ­சி­யம். அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து கலைச் செயல்­களில் ஈடு­ப­டு­வதை பெரு­மை­யாகக் கொள்ள வேண்­டும்," என்று கூறி­னார் நீ சூன் குழுத்­தொ­குதி அடித்­தள அமைப்­பு­க­ளுக்­கான ஆலோ­ச­க­ரான குமாரி கேரி டான்.

"இத்தகைய செயல்­கள் நமக்­குள் கருத்து வேறு­பா­டு­களை அகற்றி ஒற்­று­மையை வளர்க்­கும். சக குடி­யி­ருப்­பா­ளர்­க­ளு­டன் பந்­தத்தை வளர்க்க முயற்­சிப்­பதே எங்­க­ளது அடித்­தள அமைப்பு நிறு­வ­னத்­தின் குறிக்­கோள் ஆகும்," என்றார் அவர்.

இந்­திய இனக் குழுக்­களில் புத்­தாண்­டு­க­ளைக் கொண்­டா­டும் வகை­யில் சித்­தி­ரைக் கலை­விழா சனிக்­கி­ழமை மாலை கோலாகலமாக நடை­பெற்­றது.

ஈராண்­டு­க­ளுக்­குப் பின்­னர் நேர­டி­யாக ஆடல், பாடல், அதிர்ஷ்­டக் குலுக்­கு­டன் நடை­பெற்ற கலை­வி­ழா­வில் கிட்­டத்­தட்ட 500 பேர் பங்­கேற்று மகிழ்ந்­த­னர்.