ஆய்வு: சிறாரின் தடுப்பூசிப் பயத்தை குறைக்கும் மெய்நிகர் தொழில்நுட்பம்

ஆய்வு: சிறாரின் தடுப்பூசிப் பயத்தை குறைக்கும் மெய்நிகர் தொழில்நுட்பம்

2 mins read
83df6e63-23c4-4612-acba-aada29ec52cf
மெய்நிகர் தொழில்நுட்ப கேட்பொறியை அணிந்திருக்கும் இந்தச் சிறுவனுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. படம்: சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்கள் -

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள பல­துறை மருந்­த­கங்­க­ளுக்­குச் செல்­லும் சிறார்­கள், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும்­போது ஏற்­படும் வலி மற்­றும் பயத்­தில் இருந்து அவர்­களது கவ­னத்­தைத் திசை­தி­ருப்ப மெய்­நி­கர் தொழில்­நுட்­பத்­து­டன் கூடிய கேட்­பொறி (headset) வழங்­கப்­படும்.

'சில்­வர்' என அழைக்­கப்­படும் இந்த மென்­பொ­ருள், இரு நிமி­டங்­க­ளுக்­குக் கதை ஒன்­றைச் சொல்­லும்.

வலியை ஏற்­ப­டுத்­தும் மருத்­துவச் சிகிச்சை முறை­யில் சிறார்­களின் கவ­னத்­தைத் திசை­தி­ருப்ப தற்­போது விளை­யாட்டுப் பொருள்கள் வழங்­கப்­படு­வது­டன் காணொளிக் காட்­சி­களும் காட்­டப்­ப­டு­கின்­றன. இனி அவற்­றுக்கு ஒரு மாற்­றாக இந்த மென்­பொ­ருள் பயன்­ப­டுத்­தப்­படும்.

சிறார்­க­ளுக்­குத் தடுப்­பூசி செலுத்­தும்­போது அவர்­க­ளுக்கு ஏற்­படும் பயத்­தைத் தணிக்க, மெய்­நி­கர் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­படுத்­து­வது குறித்து சிங்­ஹெல்த் பல­துறை மருந்­த­கம் நடத்­திய ஆய்­வில் 'சில்­வர்' மென்­பொ­ருள் தயா­ரிக்­கப்­பட்­டது.

தேசிய கல்­விக் கழ­கத்­தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­க­ளு­ட­னும் அனு­ப­வம் உடைய தாதி­க­ளு­ட­னும் சேர்ந்து சிங்­ஹெல்த் குழு இந்தக்­ கதையை உரு­வாக்­கி­யது.

"ஐபேட் சாத­னத்­தில் யூடி­யூப் காணொ­ளி­யைப் பார்க்­கும்­போ­தும், தங்­க­ளுக்­குப் பக்­கத்­தில் தாதி­களும் ஊசி­களும் இருப்­ப­தைச் சிறார்­கள் கவ­னிப்­பர். மாறாக, மெய்­நி­கர் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­தும்­போது சிறார்­க­ளின் கவ­னம் திசை­தி­ருப்­பப்­ப­டு­கிறது.

"இத­னால், தடுப்பூசி போடப்­படும்­போது அவர்­களுக்கு வலியை உண­ரும் தன்­மை­யும் குறை­கிறது," என்று சிங்ஹெல்த் பல­துறை மருந்­தகம்-செங்­காங் மருந்­தக இயக்­கு­நர் டாக்­டர் சாங் ஸி யிங் கூறி­னார்.

என­வே­தான், சிறார்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும்­போது மெய்­நி­கர் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­து­வதற்­கான சாத்­தி­யக்­கூ­று­களை ஆய்வு முடி­வு­கள் காட்­டு­வ­தாக அவர் சொன்­னார்.

இளம் வய­தி­ன­ருக்­கும் வயது முதிர்ந்­த­வர்­க­ளுக்­கும் இந்த ஆய்வை விரி­வு­ப­டுத்த சிங்­ஹெல்த் குழு திட்­ட­மி­டு­கிறது. ஊசி போட்டுக்­கொள்ள பயம் உடை­யோரும் இந்த ஆய்­வில் உட்­ப­டுத்­தப்­ப­டு­வர்.

"மெய்­நி­கர் தொழில்­நுட்­பத்­தைப் பொறுத்­த­மட்­டில், சிறார்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வரும்­போது அவர்­கள் புதுப்­புது அனு­ப­வங்­களைப் பெறும் நோக்­கில், பல­தரப்­பட்ட மென்­பொ­ரு­ளைத் தயா­ரிக்க நாங்­கள் பரி­சீ­லித்து வரு­கி­றோம்," என்­றார் சிங்­ஹெல்த் பல­துறை மருந்­தக ஆய்­வுப் பிரிவு இயக்­கு­நர் இணைப் பேரா­சி­ரி­யர் டான் நியாப் சுவான்.