விமானப் போக்குவரத்தை மீட்டெடுக்க அமைச்சர்கள் உறுதி

விமானப் போக்குவரத்தை மீட்டெடுக்க அமைச்சர்கள் உறுதி

1 mins read
2603663a-485c-48bc-8cc3-3ea9d921f1be
-

தென்­கி­ழக்­கா­சி­யா­வின் ஏழு நாடு­க­ளைச் சேர்ந்த போக்­கு­வ­ரத்து அமைச்­சர்­கள் அணுக்­க­மா­கச் செயல்­பட்டு உட­ன­டி­யாக விமா­னப் போக்­கு­வ­ரத்­தைப் பழைய நிலைக்கு மீட்­டெ­டுக்க உறுதி தெரி­வித்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூர், மலே­சியா, இந்­தோ­னீ­சியா, தாய்­லாந்து, பிலிப்­பீன்ஸ், கம்­போ­டியா, புருணை ஆகி­ய­வற்­றின் போக்­கு­வ­ரத்து அமைச்­சர்­கள் இதன் தொடர்­பில் கூட்­ட­றிக்கை வெளி­யிட்­டுள்­ள­னர். ஆசி­யான் வட்­டா­ரத்­தில் ஒரே விமா­னப் போக்­கு­வ­ரத்­துச் சந்­தையை அமைப்­ப­தற்­கும் அந்­தந்த நாட்­டில் வழங்­கப்­படும் கொவிட்-19 சுகா­தா­ரச் சான்­றி­தழை மற்ற நாடு­கள் அங்­கீ­க­ரிப்­ப­தற்­கும் இவர்­கள் இணக்­கம் கண்­ட­னர்.

தென்­கி­ழக்­கா­சி­யா­விற்­குள்­ளும் மற்ற வட்­டா­ரங்­க­ளு­ட­னும் விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் தொடர்பை வலுப்­ப­டுத்த சேர்ந்து பணி­யாற்­ற­ அ­மைச்­சர்­கள் உறு­தி­பூண்­ட­னர்.

சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யின் வளர்ச்சி, மீட்சி, துறை­சார்ந்த ஊழி­யர்­க­ளின் நலன் ஆகி­ய­வற்­றுக்கு ஆத­ரவு தரும் வகை­யில் பயிற்சி, திறன் மேம்­பாடு போன்­ற­வற்றை ஊக்­கு­விக்­க­வும் ஏழு அமைச்­சர்­களும் கடப்­பாடு தெரி­வித்­த­னர்.

சாங்கி விமா­னப் போக்­கு­வரத்து உச்­ச­நிலை மாநாட்­டின் முதல் நாளான நேற்று அமைச்­சர்­க­ளின் அறிக்கை வெளி­யா­னது.

விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை சார்ந்த தலை­வர்­களும் ஏழு நாட்டு அமைச்­சர்­களும் துறை­யின் வருங்­கா­லம் குறித்து இந்த மாநாட்­டில் கலந்­து­ரை­யா­டு­வர் என்று தெரிவிக்கப்பட்டது.