முன்னாள் 'யுஏஇ' தலைவரின் இறுதிச்சடங்கில் அதிபர் ஹலிமா

முன்னாள் 'யுஏஇ' தலைவரின் இறுதிச்சடங்கில் அதிபர் ஹலிமா

1 mins read
f241d648-06b7-485d-ae7d-67441b7f15c9
-

ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­க­ளின் ('யுஏஇ') முன்­னாள் அதி­பர் ஷேக் காலிஃபா பின் சையது அல் நஹ்­யா­னின் மறை­வுக்கு, சிங்­கப்­பூர் அதி­பர் ஹலிமா யாக்­கோப் இரங்­கல் தெரி­வித்­துள்­ளார்.

மறைந்த தலை­வ­ரின் சகோ­த­ர­ரும் ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­க­ளின் தற்­போ­தைய அதி­ப­ரும் அபு­தா­பி­யின் ஆட்­சி­யா­ள­ரு­மான ஷேக் முக­மது பின் சையது அல் நஹ்­யா­னி­டம் திரு­வாட்டி ஹலிமா இரங்­கல் தெரி­வித்­தார்.

காலஞ்­சென்ற ஷேக் காலி­ஃபா­விற்கு அபு­தா­பி­யில் நடை­பெற்ற அதி­கா­ர­பூர்வ இரங்­கல் கூட்­டத்­தில் சிங்­கப்­பூர் சார்­பாக அவர் கலந்­து­கொண்­டார்.

அம­ர­ரான ஷேக் காலி­ஃபா­வின் தலை­மைத்­து­வத்­தின்­கீழ் ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­கள் வளப்­பமும் நிலை­யான மேம்­பா­டும் அடைந்­த­தா­கத் திரு­வாட்டி ஹலிமா ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டார்.

ஷேக் முக­ம­தின் தலை­மைத்­து­வத்­தின்­கீ­ழும் சிங்­கப்­பூ­ருக்­கும் ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­க­ளுக்­கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உற­வு­கள் வலு­வ­டை­யும் என்று நம்­பிக்கை தெரி­வித்­தார்.

பிர­த­மர் லீ சியன் லூங் சென்ற சனிக்­கி­ழமை அனுப்­பிய இரங்­கல் செய்­தி­யில் ஷேக் காலிஃபா தமது வாழ்வை அபு­தாபி, ஐக்­கிய அர­புச் சிற்­ற­ரசு ஆகி­ய­வற்­றின் மக்­க­ளுக்­குச் சேவை­யாற்­ற அர்ப்­ப­ணித்­த­வர் என்று குறிப்­பிட்­டார்.