ஜப்பானைச் சுற்றிப் பார்க்க விரும்பும் சிங்கப்பூரர்கள்

ஜப்பானைச் சுற்றிப் பார்க்க விரும்பும் சிங்கப்பூரர்கள்

1 mins read
4cdc4ab3-6368-49fb-8d43-a893733d0f61
-

சிங்­கப்­பூர் உள்­ளிட்ட நான்கு நாடு­களில் இருந்து சோதனை அடிப்­ப­டை­யில் சுற்­றுப்­ப­ய­ணி­களை அனு­ம­திப்­பது குறித்து ஜப்­பான் அறி­வித்­த­தை­ய­டுத்து அதி­க­மா­னோர் அதன் தொடர்­பில் விசா­ரிப்­ப­தா­கப் பயண முக­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

ஜப்­பா­னிய சுற்­றுப்­ப­யண அமைப்பு நேற்று முன்­தி­னம் முன்­கூட்­டியே முடிவு செய்­யப்­பட்ட இடங்­க­ளுக்கு சுற்­றுலா வழி­காட்­டி­யு­டன்­கூ­டிய குழுப் பய­ணங்­க­ளுக்கு மட்­டுமே அர­சாங்­கம் அனு­மதி வழங்­கும் என்று அறி­வித்­தது.

அறி­விப்பு வெளி­யான பிறகு 20க்கும் மேற்­பட்ட தொலை­பேசி அழைப்­பு­கள் வந்­த­தாக 'சிடிசி டிரா­வல்' நிறு­வ­னம் கூறி­யது.

பெரும்­பா­லா­னோர் இந்த ஆண்டு இறு­தி­யில் பய­ணம் செய்­வது குறித்து விசா­ரித்­த­தாக அந்த நிறுவனம் குறிப்பிட்டது.

சிறிய குழுக்களாகப் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் அதி­க­பட்­சம் ஒன்­பது பேர் கொண்ட குழுக்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­ய­வி­ருப்­ப­தா­க­வும் 'சான் பிர­தர்ஸ் டிரா­வல்' நிறு­வ­னம் கூறி­யது.

ஜூன் மாத இறு­தி­யில் அல்­லது ஜூலை மாதத் தொடக்­கத்­தில் இருந்து ஜப்­பா­னிய சுற்­றுப் பய­ணங்­க­ளைத் தொடங்­க­வி­ருப்­ப­தா­க­வும் 'சான் பிர­தர்ஸ் டிரா­வல்' நிறு­வ­னம் கூறி­யது.

இருப்­பி­னும் சில பய­ணி­கள் ஜப்­பான் அதன் எல்­லை­களை முழு­தும் திறக்­கும்­வரை காத்­தி­ருக்க முடி­வு­செய்­துள்­ள­னர்.

குழுவாக, கட்டுப்பாடுகளுடன் செல்லாமல் தனிப்­பட்ட முறை­யில் பய­ணம் செய்­வதே இவர்­க­ளது விருப்­பம். இந்த முயற்­சியை வர­வேற்ற 'ஜப்­பான் ஏர்­லைன்ஸ்' நிறு­வ­னத்­தின் பேச்­சா­ளர், உள்­ளூர்ப் பொரு­ளி­ய­லுக்கு இத்தகைய நடவடிக்கை புத்­து­யி­ரூட்­டும் என்று நம்­பிக்கை தெரி­வித்­தார்.