அங் மோ கியோவில் ஆகப் பெரிய குளிரூட்டும் கட்டமைப்பு

அங் மோ கியோவில் ஆகப் பெரிய குளிரூட்டும் கட்டமைப்பு

2 mins read
835f69f3-4f1d-463f-b1fb-385a6f60eeba
(படம்: எஸ்பி) -

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய குளி­ரூட்­டும் கட்­ட­மைப்பு 2025ஆம் ஆண்­டுக்­குள் அங் மோ கியோ வட்­டா­ரத்­தில் அமை­ய­வி­ருக்­கிறது. தொழில்­து­றைக் கட்­ட­ட­மான 'எஸ்­டி­மைக்ரோ எலக்ட்­ரா­னிக்ஸ் டெக்­னோ­பார்க்­கில்' அது அமைக்­கப்­ப­ட­வி­ருக்­கிறது.

514 மில்­லி­யன் வெள்ளி முத­லீட்­டில் இந்­தக் கட்­ட­மைப்பு அமைக்­கப்­படும். பொது­வான ஓரி­டத்­தில் தண்­ணீர் குளிர்­விக்­கப்­படும். பின்­னர் அங்­கி­ருந்து குழாய் வழி­யா­கக் கட்­ட­டங்­க­ளுக்கு குளி­ரூட்­டப்­பட்ட தண்­ணீரை அனுப்­பும் இத்­த­கைய கட்­ட­மைப்­பு­களை விரி­வு­ப­டுத்­து­வது குறித்து சென்ற மாதம் அறி­விக்­கப்­பட்­டது.

கென்ட் ரிட்ஜ், ஜூரோங் லேக், தெம்­ப­னிஸ், மரினா பே ஆகிய வட்­டா­ரங்­களில் குளி­ரூட்­டும் கட்­ட­மைப்­பு­கள் நிறு­வப்­படும் என்­றும் கூறப்­பட்­டது.இத்­த­கைய கட்­ட­மைப்­பு­கள் மூலம் மின்­சா­ரப் பயன்­பாட்­டை­யும் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தை­யும் குறைப்­பது இலக்கு.

அங் மோ கியோ­வில் அமை­யும் புதிய குளி­ரூட்­டும் கட்­ட­மைப்பு, ஆண்­டுக்கு 20 விழுக்­காடு வரை மின்­சா­ரத்­தைச் சேமிக்க உத­வும் என்று கரு­தப்­ப­டு­கிறது. ஆண்­டுக்கு 120,000 டன் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தை­யும் அது குறைக்­கும். கிட்­டத்­தட்ட 109,100 கார்­களை சிங்­கப்­பூ­ரின் சாலை­களில் இருந்து அகற்­று­வ­தற்கு அது சமம்.

புதிய குளி­ரூட்­டும் கட்­ட­மைப்பு செயல்­ப­டத் தொடங்­கி­ய­தும் நான்­கா­யி­ரம் சதுர மீட்­ட­ருக்­கும் அதி­க­மான நிலப்­ப­ரப்பை மறு­ப­ய­னீடு செய்ய இய­லும். சூரி­ய­சக்­தி­யில் இருந்து மின்­சா­ரம் தயா­ரிக்க அந்த இடம் பயன்­ப­டக்­கூ­டும். எஸ்பி குழு­மம் புதிய கட்­ட­மைப்பை வடி­வ­மைத்து, உரு­வாக்கி, நிர்­வ­கிக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இதன் தொடர்­பில் 'எஸ்­டி­மைக்­ரோ­எ­லக்ட்­ரா­னிக்ஸ்' நிறு­வ­னத்­து­டன் அது புரிந்­து­ணர்­வுக் குறிப்­பில் கையெ­ழுத்­திட்­டுள்­ளது.

உல­க­ளா­விய நிலை­யில் 'எஸ்­டி­மைக்­ரோ­எ­லக்ட்­ரா­னிக்ஸ்' நிறு­வ­னம் இத்­த­கைய குளி­ரூட்­டும் கட்­ட­மைப்பை நிறு­வு­வது இதுவே முதல்­முறை. 2027க்­குள் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்தை வெகு­வா­கக் குறைப்­ப­து அதன் இலக்கு.