$1.75 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தங்களை கைவசப்படுத்திய 'செம்ப்மரின்'

$1.75 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தங்களை கைவசப்படுத்திய 'செம்ப்மரின்'

1 mins read
d0140d30-4e16-449d-89c3-aa9cf029d7d1
-

'செம்ப்­ம­ரின்' எனப்­படும் 'செம்ப்­கார்ப் மரின்' நிறு­வ­னம் இந்த ஆண்­டின் முற்­பா­தி­யில் மேம்­பட்ட நிதி ­நி­லை­மையை எதிர்­பார்க்­கிறது. புதிய ஒப்­பந்­தங்­கள் கைவ­ச­மா­ன­தும் தொழில்­துறை நில­வ­ரம் மேம்­பட்­டு­வ­ரு­வ­தும் அதற்­குக் கார­ணங்­கள்.

நிறு­வ­னம் நேற்று வெளி­யிட்ட முதல் காலாண்­டுக்­கான இடை­நிலை மதிப்­பீட்­டில் இந்த விவ­ரங்­களை வெளி­யிட்­டது. 2022 நிதி­யாண்­டுக்­கான 12 வேலைத்­திட்­டங்­களில் ஆறு நிறை­வு­பெற்­று­விட்­ட­தாக அது குறிப்­பிட்­டது.

அண்மை வேலைத்­திட்­டங்­க­ளால் நிறு­வ­னத்­தின் பணப்­பு­ழக்­கம் மேம்­பட்­டி­ருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது. வேலைத்­திட்­டங்­கள் படிப்­ப­டி­யாக நிறை­வ­டை­யும் நிலை­யில் அவற்­றுக்கு ஒதுக்­கப்­பட்ட வளங்­களை மற்ற புதிய திட்­டங்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முடி­வ­தாக 'செம்ப்­ம­ரின்' கூறி­யது.

'மெர்ஸ்க்' நிறு­வ­னத்­திற்­கான கடற்­க­ரைக்கு அருகே காற்­றா­லையை நிறுவ உத­வும் கப்­ப­லுக்­கான வடி­வ­மைப்­புப் பணி­களும் புதிய திட்­டங்­களில் அடங்­கும்.

அமெ­ரிக்­கக் கடற்­ப­டைக் கப்­பல்­கள் மூன்று, 'மெர்ஸ்க்' நிறு­வ­னக் கப்­பல்­கள் ஒன்­பது ஆகி­ய­வற்­றின் பழு­து­பார்ப்­புப் பணி­கள் தொடர்­பி­லும் ஒப்­பந்­தங்­க­ளைச் செய்­து­கொண்­ட­தாக 'செம்ப்­ம­ரின்' தெரி­வித்­தது.