மின் வர்த்தகத்தை கற்க அறுபது புதிய பாடங்கள்

மின் வர்த்தகத்தை கற்க அறுபது புதிய பாடங்கள்

2 mins read
b7da094a-7c6e-4d86-9199-54244dbad8ca
மின் வர்த்தகத் துறையில் அறுபது பாடங்களை நடத்த சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்துக்கும் சினாகி நிறுவனத்துக்கும் இைடயே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. படம்: லியான்ஹ சாவ்பாவ் -

எஸ்­எம்யு என்று அழைக்­கப்­படும் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக் கழ­கம், 'சினாகி' எனும் மின்­வர்த்­தக நிறு­வ­னத்­து­டன் சேர்ந்து மின்­வர்த்­த­கத்தை பெரி­ய­வர்­கள் கற்­றுக் கொள்­வ­தற்­காக 60 புதிய பாடங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அறு­பது பாடங்­க­ளை­யும் எஸ்­எம்­யு­வின் நிபு­ணத்­துவ பயிற்சி அமைப்­பான எஸ்­எம்யு அகா­ட­மி­யும் சினாகி மின்­வர்த்­தக நிறு­வ­னத்­தின் சினாகி காமர்ஸ் அகா­ட­மி­யும் நடத்­த­வி­ருக்­கின்­றன.

இது பற்றி கருத்­துை­ரத்த 'ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர்' தலைமை நிர்­வா­கி­யான டான் கோக் யாம், புதிய பாடங்­கள் மூலம் 2025ஆம் ஆண்­டுக்­குள் 3,000 பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­தார்.

அதி­வே­கத்­தில் வளர்ச்சி அடைந்து வரும் மின்-வர்த்­தகத் துறை­யில் அதற்­கு­ரிய திறன்­க­ளைப் பெற்ற மனி­த­வ­ளம் இருப்­பதை இதன் மூலம் உறுதி செய்­யப்­படும் என்றார் அவர்.

செவ்­வாய்க்கிழமை மாலை புதிய பாடங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தும் நிகழ்ச்சி நடை­பெற்­றது.

"இதர துறை­க­ளை போன்று மின் வர்த்­தகத் துறைக்­கும் மின்­னி­லக்­கம், நிலைத்­தன்மை போன்­ற­வற்­றில் திறன் பெற்ற திற­னா­ளர்­கள் தேவை.

"மின் வர்த்­த­கத் துறை­யில் முன் அனு­ப­வம் இல்­லாத சிங்­கப்­பூ­ரர் களுக்கு பயிற்சி அளிக்­க­வும் இது உத­வி­யாக இருக்­கும்," என்றும் திரு டான் தெரிவித்தார்.

தனிப்­பட்ட மேம்­பாடு, சந்­தை ­ம­யப்­ப­டுத்­து­தல், புத்­தாக்கச் சேவை­கள், வாடிக்­கை­யா­ளர்­களை ஈடு­ ப­டுத்­து­வ­தற்­கான தீர்வு உள்­ளிட்ட ஏழு தலைப்­பு­களில் புதிய பாடங்­கள் கவ­னம் செலுத்­து­ம்.

தென்­கி­ழக்கு ஆசியா மின்­னி­லக்­க­ம­ய­மாகி வரும் நிலை­யில் அவற்­றுக்­கான திற­னா­ளர்­களை வேலைக்கு அமர்த்­து­வ­தில் இவ்­வட்­டார நிறு­வ­னங்­கள் சவால்களை எதிர்நோக்குகின்றன என்று செவ்­வாய்க்கிழமை வெளி­யிட்ட அறிக்­கை­யில் சினாகி தெரி­வித்­தது.

சூழ்­நி­லை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அனு­ப­வக் கற்­றல் மூலம் மின்­னி­லக்க வர்த்­தக துறைக்கு தேவை­யான திறன்­களை ஆழ­மா­கக் கற்­றுக்ெ­காள்­ளும் வகை­யில் புதிய பாடங்­கள் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வாண்டு 2வது பாதி­யி­லி­ருந்து பெரி­ய­வர்­கள் இந்­தப் பாடத் திட்­டங்­களில் சேர முடி­யும்.

சிங்­கப்­பூ­ரில் மின்­வர்த்­தக விற்­பனை 2026ஆம் ஆண்­டுக்­குள் 10 பில்­லி­யன் யுஎஸ் டாலர் (S$13.4 பில்லியன்) அள­வுக்கு வளர்ச்சி அடை­­வதை எதிர்­பார்க்­க­லாம் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட்­டில் வெளி­யிட்ட அறிக்­கை­யில் பெய்ன் அண்ட் கம்­பெனி சுட்டிக்காட்டியிருந்தது.