‘பயங்கரவாதத்திற்கு எதிராக உலகம் ஒன்றுபட வேண்டும்’

ஐஎஸ்­ஐ­எஸ், அல்-கொய்தா ேபான்ற பயங்­க­ர­வாத அமைப்­பு­கள் கடந்த ஆண்­டு­களில் தாக்­கப்­பட்டு தலை­மைத்துவத்தை இழந்து பின்­ன­டை­வைச் சந்­தித்­துள்­ளன. இருந்­தா­லும் மீள்­தி­ற­னு­டன் மா­றிக் கொள்­ளக் ­கூ­டிய ஆற்­றல் உண்டு என்­பதை அவை நிரூ­பித்­துள்­ளன.

அதே சம­யத்­தில் வல­சாரி தீவி­ர­வா­தம் வளர்ந்து மிரட்­ட­லாக தலை தூக்கி வரு­கிறது. அதன் ஆத­ர­வா­ளர்­கள் முன்­பை­விட நன்கு திட்­ட­மிட்டு தாக்­கு­தலை நடத்­தக் கூடி­ய­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர் என்று உள்­துறை துணை அமைச்­சர் டாக்­டர் முகம்­மது ஃபைசால் இப்­ரா­ஹிம் நேற்று தெரி­வித்தார்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை நடை­பெ­றும் மிலி­போல் ஆசிய-பசி­பிக் 2022 வட்­டா­ரப் பாது­காப்பு மாநாட்­டின் முதல் நாளான நேற்று அவர் கலந்­து­கொண்டு ேபசி­னார். சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலை­யத்­தில் அந்த மாநாடு நடை­பெற்­றது.

"சிங்­கப்­பூர் உட்­பட எந்த நாடும் பயங்­க­ர­வா­தத்­தை முற்றிலும் தடுக்கும் அரண் இல்லை," என்று இணைப் பேரா­சி­ரி­ய­ரான ஃபைசால் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி உட்­லண்ட்ஸ் வட்­டா­ரத்­தில் உள்ள இரண்டு பள்­ளி­வா­சல்­களில் முஸ்­லிம்­க­ளைத் தாக்க திட்­ட­மிட்ட 16 வயது சிங்­கப்­பூ­ரர் 2020 டிசம்­ப­ரில் தடுத்து வைக்­கப்பட்­டதை அவர் உதா­ர­ண­மாக சுட்­டிக்­காட்­டி­னார். நியூ­சி­லாந்­தின் கிறைஸ்ட்­சர்ச்­சில் நடந்த தாக்­கு­த­லை­யும் அவர் குறிப்­பிட்டு பேசி­னார். "வல­சாரி தீவி­ர­வாத சித்­தாந்­தத்­தால் அவன் ஈர்க்­கப்­பட்­டான். இஸ்­லாம் மீது கடு­மை­யான விரோ­தத்­தைக் கொண்­டி­ருந்­தான, வன்­முறை செயல்­க­ளால் அவன் கவ­ரப்­பட்­டான்," என்­றார் அவர்.

"பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக உள்­நாட்டு முயற்­சி­கள் மட்­டும் ேபாதாது. உல­கம் முழு­வ­தும் உள்ள சட்ட அம­லாக்க அமைப்­பு­கள் சேர்ந்து செயல்­பட்டு பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளை­யும் தனிப்­பட்­ட­வர்­கள் மேற்­கொள்­ளும் பயங்­க­ர­வா­தச் செயல்­க­ளை­யும் கண்­டு­பி­டித்து, தடுக்க வேண்­டும்," என்று அமைச்­சர் ஃபைசால் கேட்­டுக் கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!