வந்த வழியே திரும்பினார்

வந்த வழியே திரும்பினார்

1 mins read
065b4e20-cd88-4ac8-85b4-49c762eefc6e
அப்துல் சோமத் பத்துபாரா. படம்: உஸ்தாஸ் அப்துல் சமத் பேஸ்புக் -

சிங்கப்பூருக்கு வந்த இந்தோனீசிய மத போதகருக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப் பட்டதால் வந்த வழியே அவர் இந்தோனீசியா திரும்பினார்.தீவிரவாதங்களைப் போதிக்கும் பின்னணியை அவர் கொண்டு இருந்ததால் அதுபோன்ற செயல்களுக்கு இங்கு இடமில்லை என்று சிங்கப்பூர் உள்துைற அமைச்சு தெரிவித்தது. கடந்த திங்கட்கிழமை அன்று மத போதகர் அப்துல் சோமத் பத்துபாராவும் அவருடன் வந்த ஆறு பேரும் சிங்கப்பூரில் நுழைய அனுமதிக்கப்பட வில்லை. பாத்தாமிலிருந்து சிங்கப்பூர் தானா மேரா படகு முனையத்துக்கு வந்த அவர்கள் அதே நாளில் படகு மூலம் பாத்தாமுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று உள் துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் தற்கொலைத் தாக்குதலை ஆதரித்து அவர் கடந்த காலங்களில் பேசியதாக ேபச் சாளர் மேலும் தெரிவித்தார்.