தனது பிறந்த நாளன்று குப்பை சேகரிக்கும் நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்த துப்புரவாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை தாக்கி தாடையை உடைத்துள்ளார் ஒருவர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி நடந்த சம்பவத்தில் குற்றச் செயல்களைப் புரிந்த சிங்கப்பூரரான 43 வயது சஞ்ஜீவன் மஹாலிங்கத்துக்கு 21 மாதம், நான்கு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தன் மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டார்.
வேண்டுமென்றே காயம் விளைவித்தது, பொதுச் ேசவை ஊழியரை தாக்கியது, அவரது கடமையை செய்யவிடாமல் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.

