வரி ஏய்ப்பு; ஆடவருக்குச் சிறை

வரி ஏய்ப்பு; ஆடவருக்குச் சிறை

2 mins read
d1f2ccea-2243-4608-867e-2915179ec4a0
-

சுங்­க­வரி, பொருள் சேவை வரி செலுத்­தாத சிக­ரெட்­டு­களை சேக­ரித்து வைத்­தி­ருந்­த­தற்­கா­க­வும் அவற்றை விற்­பனை செய்­த­­தற்­கா­க­வும் கடந்த வாரம் 63 வயது சிங்­கப்­பூ­ர­ருக்கு 18 மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

'விஎஸ்­எல் மேரி­டைம் சரி­வீ­சஸ், சப்­ளைஸ்' எனும் கப்­பல்­க­ளுக்­குத் தேவை­யான பொருட்­களை விநி­யோ­கிக்­கும் நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ள­ரான டான் டோங் மெங், மற்ற பொருட்­க­ளு­டன் சிக­ரெட்­டு­களை மறைத்து வைத்­தி­ருந்­தார்.

கப்­பல்­க­ளுக்கு ஏற்­று­மதி ெசய்­யப்­படும் சிக­ரெட்­டு­க­ளுக்கு சுங்க வரி, பொருள் சேவை வரி­யி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­ப­டு­கிறது.

இதனை தனக்­குச் சாத­மாக பயன்­ப­டுத்­திக் கொண்ட டான், கப்­பல்­க­ளுக்கு விற்­ப­தா­கக் கூறி கூடு­த­லாக சுங்க வரி செலுத்­தாத சிக­ரெட்­டு­களை வெளி இடங்­களில் விற்று வந்­தார். சில சிக­ரெட் பெட்டிகளை சேக­ரித்து வைத்­தி­ருந்­தார். 2020 ஆகஸ்ட் முதல் 2021 ஜூன் வரை­யில் கப்­பல்­க­ளுக்குத் தேவை­யான சிக­ரெட்­டு­க­ளை­விட கூடு­த­லாக சிக­ரெட்­டு­களை பல­முறை டான் வாங்­கி­ய­தாக சிங்­கப்­பூர் சுங்கத் துறை தனது அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

2021 ஜூலை 2ஆம் தேதி சுங்கத் துறை அதி­கா­ரி­கள், அவ­ரது இடத்தை சோத­னை­யிட்­ட­போது வரி செலுத்­தப்­ப­டாத 86 பெட்டி சிக­ரெட்­டு­களைக் கண்­டு­பி­டித்­த­னர். சுமார் 14 முறை ஏற்­று­மதி அனு­மதி பெற்று சிக­ரெட்­டு­களை டான் மற்ற இடங்­களில் விற்று வந்­தது விசா­ர­ணை­யில் ெதரிய வந்­தது. வரி செலுத்­தப்­ப­டாத சிக­ரெட்டுகளை சேமித்து வைத்த ஒரு குற்றச் சாட்­டை­யும் வரி ஏய்ப்பு செய்த ஒன்­பது மோசடிக் குற்­றச்­சாட்டுகளை­யும் டான் ஒப்­புக் கொண்­டார். மொத்­தம் பத்து குற்­றச் செயல்களில் 68,000 வெள்­ளிக்கு அவர் வரி ஏய்ப்பு செய்­துள்­ளார்.

அவ­ருக்கு தண்­டனை விதிக்­கப்­ப­டும்­போது சுங்­க­வரி செலுத்­தாத ஒரு குற்­றச்­சாட்­டை­யும் வரி ஏய்ப்பு செய்த இதர 25 மோசடி குற்­றச்­சாட்டு­க­ளை­யும் நீதி­மன்­றம் கவ­னத்­தில் எடுத்­துக்கொண்டது.