ஜாலான் புக்கிட் மேரா வீட்டில் தீ மூண்டதைத் தொடர்ந்து ஏறக் குறைய 35 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். செவ்வாய்க்கிழமை காலை 11.35 மணிக்கு தீ விபத்து குறித்து தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத்தற்காப்புப் படை தெரிவித்தது. இதையடுத்து ஜாலான் புக்கிட் மேராவில் புளோக் 117க்கு 'எஸ்சிடிஎஃப்' வீரர்கள் விரைந்தனர். அப்போது அந்த புளோக்கில் 9வது மாடியில் உள்ள வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறிக் கொண்டிருந்தது. சுவாசக் கருவிகளை அணிந்த வீரர்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த தாகவும் அப்போது அங்கு யாரும் இல்லை என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 35 அக்கம்பக்க குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மின்சாரக் கசிவினால் தீ மூண்டிருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வருவதாகவும் அது கூறியது. குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்ட படத்தில் வீட்டின் தரையில் படுக்கை விரிப்பும் கருகிய பொருட்களும் இருப்பதைக் காண முடிந்தது. இதற்கிடையே தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான இந்திராணி ராஜா, வீட்டில் இருந்த இரு குழந்தைகளும் ஒரு பெண்ணும் வெளியே போயிருந்ததால் யாரும் காயம் அடையவில்லை என்று பேஸ்புக் பதிவில் குறிப் பிட்டுள்ளார்.
9வது மாடியில் உள்ள வீட்டிலிருந்து கரும்புகை வெளி யேறியது.
படம்: இந்தி ராணி ராஜா ஃபேஸ்புக்

