அடுத்தாண்டுக்கான தொடக்கநிலை ஒன்றாம் வகுப்புக்கான பதிவு ஜூன் 29ஆம் தேதி தொடங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஈராண்டுகள் போல விண்ணப்பங்கள் இணையம் மூலம் சமர்ப்பிக்கபட வேண்டும்.
முன்னுரிமை பதிவுக்குத் தகுதிபெறாத சிறுவர்களுக்கு இவ்வாண்டு கூடுதல் இடங்கள் ஒதுக்கிடப்படும்.
2C கட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளியிலும் 40 கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும் என கல்வி அமைச்சு கூறியது. இந்தக் கட்டத்தின் கீழ் பள்ளிக்கு அருகே வசிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தற்போது இந்தக் கட்டத்தில் 20 இடங்கள் ஒதுப்பட்டுள்ளன.
பதிவு குறித்த முடிவுகள் பெற்றோர்களுக்குக் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும்.


