தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிதித் துறையில் 9,400க்கும் மேற்பட்ட புதிய வேலைகள்

2 mins read
7f23fa46-b377-4157-ab70-9f935e225139
-

நிதித் துறை­யில் இவ்­வாண்டு புதி­தாக 9,400 வேலை­கள் உரு­வாக்­கித் தரப்­படும் என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் மதிப்­பிட்­டுள்­ளது. இவற்­றில் கிட்­டத்­தட்ட 3,000க்கும் அதி­க­மான வேலை­கள், தொழில்­நுட்­பம் சார்ந்­த­வை­யாக இருக்­கும் என்று ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் ரவி மேனன் தெரி­வித்­துள்­ளார்.

தொழில்­நுட்­பம் சார்ந்த இந்த வேலை­களில் மென்­பொ­ருள் வடி­வமைப்­பா­ளர்­கள், பொறி­யா­ளர்­கள் ஆகி­யோ­ருக்­காக ஒதுக்­கப்­படும் வேலை­கள் சுமார் 700 என்­றும் கூறப்­பட்­டது.

புதி­தாக நிய­மிக்­கப்­படும் ஊழி­யர்­கள், மின்­னி­லக்க நிதிச் சேவை­கள் மற்­றும் வர்த்­தக நிதிச் சேவை­கள் தொடர்­பி­லும் செயற்கை நுண்­ண­றி­வைக் கொண்டு மோச­டிச் சம்­ப­வங்­க­ளைக் கண்­ட­றி­வது தொடர்­பி­லும் ஆத­ரவு அளிப்­பர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் நிதிக் கருத்­த­ரங்­கின் போது தமது தொடக்க உரை­யில் திரு மேனன் இத­னைத் தெரி­வித்­தார்.

வரும் ஆண்­டு­களில் கூடு­தல் ஏற்­று­ம­தி­க­ளா­லும் உள்­ளூ­ரில் தேவை­கள் அதி­க­ரிப்­பா­லும் ஆசியா ஆண்­டுக்கு 5% வளர்ச்சி காணும் என்று அவர் குறிப்­பிட்­டார். இதனால் அனைத்­து­லக திற­னா­ளர்­களை ஈர்க்­கும் அதே சம­யத்­தில் வலு­வான உள்­ளூர் திற­னா­ளர் வட்­டத்­தை­யும் சிங்­கப்­பூர் கொண்­டி­ருப்­பது அவ­சி­யம் என்­றார் அவர்.

வலு­வான சிங்­கப்­பூர் அடித்­தளத்தை உரு­வாக்­கு­வது தொடர்­பில் பேசிய அவர், 'சிங்­கப்­பூ­ரர்­கள் மட்­டும்' என்ற அணு­கு­முறை இது அல்ல என்­பதை வலி­யு­றுத்­தி­னார்.

அனைத்­து­லக நிதி மைய­மாக சிங்­கப்­பூர் வளர்ச்சி காண்­ப­தற்கு இது­போன்ற ஓர் அணு­கு­முறை அபா­ய­க­ர­மாக அமைந்­து­வி­டும் என்­றார். நிதி நிலை­யங்­க­ளின் நிபு­ணத்­து­வத் தேவை­கள் அதி­வே­க­மாக விரி­வ­டைந்து வரும் நிலை­யில் உள்­ளூர்­வா­சி­க­ளின் எண்­ணிக்­கை­யால் அதை ஈடு­கட்ட முடி­யாது என்று திரு மேனன் குறிப்­பிட்­டார்.

அதைக் காட்­டி­லும் உள்­ளூர் ஊழி­ய­ர­ணி­யி­டையே சிறந்த திறன்­களை­யும் ஆற்­றல்­க­ளை­யும் உரு­வாக்கி நியா­ய­மான வேலை நிய­மன வாய்ப்­பு­களை உறு­திப்­ப­டுத்­து­வதே முக்­கி­யம் என்­றார் அவர்.

நிதித் துறை­யில் மூத்த பொறுப்பு­களில் கடந்த ஆண்டு 3,000க்கும் மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­கள் இருந்­த­னர் என்று ஆணை­யம் மதிப்­பி­டு­கிறது. இது 2016ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 80% அதி­க­மா­கும்.

"நிதித் துறை அதி­வேக வளர்ச்சி கண்டு வரு­கிறது. அத­னால் உரு­வாக்­கப்­படும் வேலை­க­ளின் எண்­ணிக்­கைக்கு நமது சிறிய உள்­ளூர் ஊழி­ய­ர­ணி­யால் ஈடு தர முடி­ய­வில்லை.

நிரப்­பப்­ப­டாத வேலை­வாய்ப்­பு­கள், உயர்ந்­து­வ­ரும் ஊதி­யங்­கள் ஆகி­ய­வற்­றால் நமது ஊழி­யர் சந்­தை­யும் திண­று­கிறது," என்று அவர் குறிப்­பிட்­டார்.

அனைத்­து­லக திற­னா­ளர்­களை நாம் வர­வேற்­கா­விட்­டால் நிதித் துறை அதன் போட்­டித்­தன்­மையை இழக்­கும் என்­றும் வளர்ச்சி சரா­சரி­யா­கவே இருக்­கும் என்­றும் அவர் எச்­ச­ரித்­தார்.

இதற்­கி­டையே, வேலை அனு­மதி அட்டை தொடர்­பான விதி­களில் மாற்­றங்­கள் இருந்­தா­லும் சிங்­கப்­பூர் தொடர்ந்து வெளி­நாட்­ட­வரை வர­வேற்­ப­தாக திரு மேனன் குறிப்­பிட்­டார்.