கலாசார பதக்கம் வென்றவரின் கண்காட்சியில் ‘இந்தியா’

கலா­சா­ர பதக்க விரு­தைப் பெற்­றுள்ள உள்­ளூர் முன்­னோ­டித் தலை­முறை ஓவி­யர் கோ பெங் குவாங், 85, தமது படைப்­பு­களில் சீன பாணி­யைக் கையாண்­டா­லும் ஒரு ­சி­ல­வற்­றில் இந்­திய வாசனை மணக்­கவே செய்­கிறது என­லாம்.

அத்­த­கைய படைப்­பு­களில் ஒன்­றான ‘இந்­தியா’ என்ற ஓவி­யம், இன்­று­ மு­தல் தொடங்­கும் திரு கோவின் கண்­காட்­சி­யில் இடம்­பெ­று­கிறது. உள்­ளூர்க் காட்­சி­களைக் கொண்ட ஓவி­யங்­க­ளு­டன் 2015ல் இந்­தியா சென்ற திரு கோ, அங்கு தாம் கண்ட வண்­ணங்­க­ளின் கல­வை­யால் பர­வ­சம் அடைந்­த­தா­கக் கூறி­னார்.

“ஜோத்­பூர் என்னை மிக­வும் கவர்ந்தது. எனக்குப் பிடித்­த­மான நிறம் நீலம் என்­ப­தால் ‘நீல நக­ரம்’ என அழைக்­கப்­படும் அந்த இடம் எனக்கு இத­ம­ளித்­தது,” என்று அவர் கூறி­னார்.

கலா­சா­ர பதக்­கத்தை 1989ஆம் ஆண்­டில் பெற்ற திரு கோ, தமது 85 படைப்­பு­களை #GBK85 ஓவி­யக் கண்­காட்­சி­யில் காட்­சிக்கு வைத்­துள்­ளார். நேற்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் அதி­கா­ர­பூர்­வ­மாக இக்­கண்­காட்­சி­யைத் தொடங்கி வைத்­தார்.

கற்­ப­னைத்­தி­றன் சார்ந்த சாத­னை­களைத் தொடர்ந்து நிகழ்த்தி வரும் திரு கோ, சிங்­கப்­பூ­ரைப் பெரு­மைப்­ப­டுத்தி உள்­ள­தா­க­வும் பல தலை­மு­றை­யி­ன­ருக்கு உற்­சா­கம் தந்­துள்­ள­தா­க­வும் திரு­வாட்டி ஹலிமா பாராட்­டி­னார்.

கான்­கோர்டு சென்­டென்­னி­யல் ஹோட்­ட­லில் இக்­கண்­காட்சி இம்­மா­தம் 29ஆம் தேதி­வரை நடை­பெ­றும். ஹோட்­ட­லின் ஆறா­வது மாடி­யில் அமைந்­துள்ள அறை­களில் கண்­காட்சி ஓவி­யங்­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன.

திரு கோவின் படைப்­பு­கள் 120க்கும் மேற்­பட்ட வெளி­நாட்­டுக் கண்­காட்­சி­களில் இடம்­பெற்­றுள்­ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: கி. ஜனார்த்தனன்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!