தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமய போதகருக்கு அனுமதி மறுப்பு: முடிவெடுக்கும் உரிமை நாட்டுக்கே

1 mins read
294ab847-56f6-4dbd-9408-b50cb0c84622
-

சிங்கப்பூருக்குள் வருவதற்கு இந்தோனீசிய சமய போதகரான அப்துல் சோமத் பத்துபாரா என்பவருக்கு திங்கட்கிழமை அன்று அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, குடிநுழைவு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் அதிகாரத்தை அந்தந்த நாடுகளே பெற்றுள்ளதாக இந்தோனீசிய வெளியுறவு அமைச்சு நேற்று கூறியது. வெளிநாட்டவருக்கு அனுமதி வழங்குவதும் மறுப்பதும் தொடர்பில் முடிவெடுக்கும் உரிமை அந்தந்த நாடுகளுக்கே உரியது என்று பேச்சாளர் மூலம் அமைச்சு தெளிவுபடுத்தியது. தீவிரவாதம் தொடர்பில் சோமத் ஏற்கெனவே போதித்திருக்கிறார் என்பதால் வந்த நாள் அன்றே திருப்பி பாத்தாமுக்கு அனுப்பப்பட்டார். இதற்குமுன் ஹாங்காங், பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளும் அவருக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளன.