கணக்குத் தணிக்கை, வரி, ஆலோசனை நிறுவனமான 'கேபிஎம்ஜி சிங்கப்பூர்' தனது உள்ளூர் அணியில் உள்ள பெரும்பாலோருக்கு சம்பளத்தை உயர்த்தவும் ஊழியர் களின் திறன்களை மேம்படுத்தும் கற்றல் திட்டங்களுக்கு 30 மில்லியன் வெள்ளியை செலவிடவும் முடிவு செய்துள்ளது.
அந்த நிறுவனத்தில் சுமார் 3,200 பேர் பணியாற்றுகின்றனர்.
குறிப்பாக புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களின் ஆரம்பச் சம்பளத்தில் இருபது விழுக்காடு வரை அதிகரிக்குக்கூடும் என்று கேபிஎம்ஜி நேற்று ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்த நிதி ஆண்டில் சம்பள உயர்வுக்காக 25 மில்லியன் வெள்ளியை ஒதுக்க அது கடப்பாடு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள ஊழியர் சந்தைக்கு ஈடாக போனஸ் வழங்கவும் கேபிஎம்ஜி உறுதி தெரிவித்துள்ளது.
உலகளாவிய நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளையின் இந்த நடவடிக்கை, தரமான ஆலோசகர் களுக்கான தேவை அதிகரித்துள்ள சமயத்தில் இடம்பெற்றுள்ளது. தமது நிறுவனத்தின் நிபுணத்துவ சேவை களின் முக்கிய பங்கை இது உணர்த்துவதாக கேபிஎம்ஜி குறிப் பிட்டது.
"நிறுவனத்திற்கு பங்களிக்கும் நிபுணத்துவ சேவையாளர்கள், கணக்குத் தணிக்கையாளர்கள், ஆலோசகர்கள் ஆகியோரை அங்கீ கரிப்பது முக்கியம்," என்று நிர்வாகப் பங்காளியான ஓங் பாங் தைேய கூறியுள்ளார்.
"மின்னிலக்கமயம், நிலைத்தன்மை உலகளாவிய வர்த்தக அரங்கில் அவசியமாகிறது. பிரச்சினைகளின் சிக்கல் இரண்டு மடங்காகியுள்ளது. இதனால் நிறுவனங்களுக்குத் துல்லியமான புத்தாக்கமான, நிச்சயமற்ற சூழ்நிலையில் தாக்குப்பிடிக்கக்கூடிய தீர்வுகள் ேதவைப்படுகின்றன," என்று அவர் குறிப்பிட்டார்.

