இஸ்லாமிய சமயத்தின் மைய வட்டாரமாகத் திகழும் மத்திய கிழக்கில் ஏற்படும் பெரிய மாற்றங்கள் ெதன்-கிழக்கு ஆசியாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்ைத ஏற்படுத்தும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
அந்த வட்டாரத்தில் உள்ள மாற்றங்களை தென்-கிழக்கு ஆசியாவில் உள்ள முஸ்லிம்கள் உற்றுக் கவனித்து வருகின்றனர். மத்திய கிழக்கின் இஸ்லாமிய நடைமுறைகள் இவ்வட்டாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தால் குறிப்பிடத்தக்க சமூக விளைவுகள் ஏற்படலாம் என்று அவர் சொன்னார். அடுத்து வரும் பத்து ஆண்டுகளில் வளைகுடா நாடுகள் வேறுபட்ட உலகுக்குத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றன. செழிப்பாக, துடிப்பாக, கவர்ச்சியாக இருக்க பொருளியல் மட்டு மல்லாமல் சமூக சீர்திருத்தமும் அவை மேற்கொள்வதாக அமைச்சர் சண்முகம் சுட்டிக் காட்டினார்.
மெய்நிகர் வழி நடைபெற்ற மத்திய கிழக்கு கழகத்தின் வருடாந்திரக் கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று அமைச்சர் பங்கேற்றுப் பேசினார்.
மத்திய கிழக்கு-தென்கிழக்கு ஆசியாவுக்கு இடையே பொருளியல் உறவுகளும் விரிவடையும் என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.

