இரு காப்புறுதி முகவர்கள் மீது குற்றச்சாட்டு

இரு காப்புறுதி முகவர்கள் மீது குற்றச்சாட்டு

1 mins read
ad265408-4d35-4091-8b86-07527a06105b
-

சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தி­டம் தவ­றான தக­வல்­க­ளு­டன் பயிற்சி படி­வங்­க­ளைச் சமர்­ப்பித்­த­தாக 'புரு­டென்­ஷி­யல் அஷு­ரன்ஸ் கம்­பெனி சிங்­கப்­பூர்' நிறு­வ­னத்­தைச் சேர்ந்த இரண்டு காப்­பு­றுதி முக­வர்­கள் மீது குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

கிரேஸ் டான் ஷென், 38, நிதி ஆலோ­ச­கர் சட்­டத்­தின் கீழ் இரண்டு குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்குகிறார்.

யுவென் புய் லெங், 44, மீது அதே சட்­டத்­தின் கீழ் ஆறு குற்­ற­சாட்­டு­களும் வேண்­டு­மென்றே நீதித் துறைக்கு இடை­யூறு செய்­த­தா­க­வும் குற்­றச்சாட்டுகளை எதிர் ேநாக்குகிறார்.

விசா­ரணை தொடர்­பில் 2018 செப்­டம்­பர் 14ஆம் தேதி நேர்­கா­ண­லுக்கு வரு­மாறு 2018 செப்­டம்­பர் 14ஆம் தேதி யுவென் அழைக்­கப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் அறிக்கை தெரி­வித்­தது. செப்­டம்­பர் 14க்கும் செப்­டம்­பர் 16க்கும் இடைப்­பட்ட காலத்­தில் டானி­டம் அவ­ருக்கு விவ­ரங்­கள் தெரி­யாத நிலை­யில் பயிற்சி படி­வங்­களை யுவென் நிரப்­பச் சொன்­ன­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­விக்­கின்­றன. டான், அந்­தப் படி­வங்­களில் தவ­றான தக­வல்­களை நிரப்­பிய பின்­னர் ஆணை­யத்­தின் அதி­கா­ரி­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. இவர்­கள் மீதான நீதி­மன்ற விசா­ர­ணைக்கு ஜூன் 16ஆம் ேததி குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.